ராஜஸ்தானில் ராஜ்புத் இனத்தவர்களை இழிவாக பேசியதாக பெண் அமைச்சர் மீது புகார் எழுந்தது. ராஜஸ்தானில் பா.ஜ.ஆட்சி நடக்கிறது. முதல்வராக வசுந்தரா ராஜே உள்ளார்.
இவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக உள்ள கிரண் மகேஷ்வரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இங்குள்ள ராஜ புத்திரர்கள் எலிகள் போன்ற வர்கள் தேர்தல் நேரத்தில் தான் வெளியே வருவார்கள் என பேசினார்.
இவரது பேச்சு ராஜபுத்திர இனத்தவர் களை கொந்தளிக்க வைத்தது. தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கிகாக எங்களை பயன்படுத்தி விட்டு இப்போது எங்கள் இனத்தையே இழிவாக பேசுவதா என அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து கர்னி சேனா அமைப்பின் மஹில் மர்கானா கூறியது, ராஜ புத்திரர்களை அவமதித்து வெளியாவன பத்மாவதி படத்திற்கு எதிராக போராடிய போது ஆதரவாக பேசிய அமைச்சர் இப்படி இழிவு படுத்துவது சரியல்ல.
உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் .இல்லை யென்றால் அவரது காது, மூக்கை நறுக்கி எடுப்போம் என்றார்.
Thanks for Your Comments