வட கொரியாவின் அணு ஆயுதங்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் மீதான தடைகளை புதுப்பித்து உத்தர விட்டுள்ளார்.
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டு களாக நீடித்துவந்த பகையின் காரணமாக வட கொரியா வுக்கு எதிராக தென் கொரியா மண்ணில் அமெரிக்க படைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.
மேலும் வட கொரியாவு க்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாக கூட்டு ராணுவ போர் பயிற்சி களில் ஈடுபட்டும் வந்தன.
இதற்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா வுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்த வடகொரியா முன் வந்தது.
அதை தொடர்ந்து கடந்த ஜூன் 12ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.
அப்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங் களை முழுமை யாக கை விடுவதாக அறிவித்தார்.
அதற்கு பதிலாக தென் கொரியா வுடன் இணைந்து போர் பயிற்சி களில் ஈடுபட மாட்டோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையே யான கூட்டு ராணுவ போர் பயிற்சிகள் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப் பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி பத்தே நாட்கள் ஆன நிலையில், வட கொரியா வின் அணு ஆயுதங்க ளால் தொடர்ந்து
அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீதான தடைகளை புதுப்பித்து உத்தர விட்டுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அணு ஆயுதங்களாலும், வட கொரிய அரசாங்கத்தின் கொள்கைகள்
மற்றும் செயல்களாலும் அபாயம் இருப்பதாக கூறிய அதிபர் டிரம்ப், நேற்று முதல் தேசிய அவசர நிலையை நீட்டித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி,
சிங்கப்பூர் உச்சி மாநாடு வெற்றி பெற்றதாக தற்பெருமையுடன் டிரம்ப் கூறியதற்கும், தற்போதைய நடவடிக்கைக்கும் அதிக முரண்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளது.
Thanks for Your Comments