கேரளா செல்லும் ரயிலில் கடத்தப்பட்ட 108 சிறுவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸாரால் மீட்கப் பட்டனர். இது குறித்து ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்ட போலீஸ் எஸ்.பி. கார்த்திக் நேற்று கூறியதாவது:
சிறுவர்கள் சிலரை ரயிலில் கடத்துவ தாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து பொகாரோ ரயில் நிலையத்திலே கேரளா சென்ற ரயிலை நிறுத்தி, ரயில்வே பாதுகாப்பு போலீஸாரின் (ஆர்பிஎப்) சோதனை செய்தோம்.
இதில் ஒரு ரயில் பெட்டியி லிருந்து 87 சிறுவர்களை மீட்டோம். இதில் 7 முதல் 17 வயது வரை சிறுவர்கள் இருந்தனர்.
அவர்கள் எல்லோரையும் ஒரு முஸ்லிம் மதரஸாவுக்கு கடத்திச் செல்வதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ராஞ்சி ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது போலீஸாரின் சோதனை தொடர்ந்தது.
அப்போது மற்றொரு பெட்டியில் இருந்த 21 சிறுவர்கள் மீட்கப் பட்டனர். 2 பெட்டிகளில் இருந்த சிறுவர் களையும் சேர்த்து மொத்தம் 108 சிறுவர்கள் மீட்கப் பட்டனர்.
அவர்களுடன் வந்த 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவர்களை அவர்கள் அழைத்துச் செல்வதற்கு அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை.
அவர்கள் அனைவருமே மவுல்விகள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை யடுத்து சிறுவர்கள் கடத்தல் வழக்கு அவர்கள் மீது பதிவு செய்யப் பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிறுவர்கள் குழந்தை நலக் குழுவிடம் (சிசிடபிள்யூ) ஒப்படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அருகிலுள்ள சிறுவர்கள் விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இந்தச் சிறுவர்களில் சிலர் ஆந்திர மாநிலம் விஜய வாடாவிலும், சிலர் தமிழகத்தின் கோயம்புத்தூரி லும் இறங்குவதாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அங்குள்ள மதரஸாக் களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட இருந்ததாக தெரிய வந்தது. சிறுவர்கள் அனைவரும் 18 வயதுக்குள் இருந்ததால் அவர்களை கடத்திச் செல்லப் பட்டனர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா மாவட்ட போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 5-ம் தேதி முசாபர்பூர் - பாந்த்ரா ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 வயதுக்குட்பட்ட 26 சிறுமிகள் கடத்தப்பட இருந்த நிலையில் ரயில்வே போலீஸார் அவர்களை மீட்டனர்.
இந்த நிலையில், 108 சிறுவர்கள் கடத்தல் சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments