தொடர் கொள்ளையில் 200 சவரன் சுருட்டிய தம்பதி கைது !

0
திருச்சி, திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள அகதிகள் முகாமில் வசிப்பவர் தேவகுமாரி, 50. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி இரவு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த மூவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த, 10 சவரன் சங்கிலியை பறித்து தப்ப முயன்றனர்.

அதில் இருவரை, அப்பகுதியினர் சுற்றி வளைத்து பிடித்தனர். துவாக்குடி போலீசில் ஒப்படைக்கப் பட்ட 

இருவரும், அகதிகள் முகாமைச் சேர்ந்த, 28 - 32 வயதுடை யவர்கள் என தெரிய வந்தது. 

தப்பி யோடிய, பாண்டி, 30 என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி அனுவுடன், 23, இலங்கைக்கு தப்பிச் செல்ல என்.ஐ.டி., அருகே வந்த பாண்டியை,போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின் அவரிடம் நடத்திய விசாரணை யில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

இது குறித்து போலீசார் கூறியதாவது:


அகதி முகாமில் இருந்த அனுவை, பாண்டி காதலித்து திருமணம் செய்து உள்ளார். 

அதற்கு முன் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த அவர், பின் மனைவி யுடன் சேர்ந்து, 

வீடுகளில் தனியாக உள்ள பெண்களிடம் நகை, பணத்தை கொள்ளை யடிக்க துவங்கி யுள்ளார். 

இதுவரை 200 சவரனுக்கு மேல் கொள்ளை அடித்துள்ளனர். இந்த நகைகளை, அட்டிகா என்ற நகைக் கடையில் விற்று வந்துள்ளனர். 

போலீசில் சிக்கியுள்ள தன் கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்தும, பாண்டி திருடி வந்துள்ளார்.

தேவ குமாரியிடம் நகையை பறிக்க முயன்ற வழக்கில், போலீசார் தேடுவது தெரிந்தும், இலங்கைக்கு தப்பிச் செல்லும் போது கைது செய்யப் பட்டுள்ளனர். 

தம்பதியை, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த, சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings