சவுதி அரேபியாவை சேர்ந்த அந்த நபர் தமது நிலை தொடர்பாக பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இது வரை உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை என கூறப்படுகிறது.
சவுதி ராணுவத்தில் சேவையாற்றிய கால கட்டத்தில் தொடர்ந்து 20 நாட்கள் அந்த நபர் தூங்காமல் கண் விழித்துள்ளார்.
ராணுவ சேவையை முடித்துக் கொண்ட பின்னர் மருத்துவ மனை சென்று தமது நிலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரித்துள்ளார்.
இதனை யடுத்து 4 நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்துள்ளது.
அவர்களால் உரிய காரணத்தை கண்டறிய முடியவில்லை என்ற போதும், குறித்த நபரின் மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் என தெரிவித் துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், இதுவரை அவரால் தூங்க முடிய வில்லை என கூறப்படுகிறது. இதனிடையே அல் பஹா பகுதி ஆட்சியர் இவரது நிலை குறித்து தெரிய வந்து விசாரித்துள்ளார்.
அவரிடம் தமக்கு ஒரு கார் மாட்டும் போதும் என தெரிவித்ததை அடுத்து புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தது மட்டுமின்றி,
எஞ்சிய காலம் மட்டும் அவரது அனைத்து தேவை களையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் அல் பஹா ஆட்சியர்.
Thanks for Your Comments