மேற்கு ஒடிசாவில் உள்ள பர்லா என்ற நகரில் ஞாயிறு காலை முடிந்த 24 மணி நேரத்தில் 622 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத பேய் மழையாகும். இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கின.
இந்த அதிகன மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகி யுள்ளனர். கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் காணவில்லை.
பர்லாவில் உள்ள ஹிராகுத் அணைத் திட்டத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை இம்மாநிலத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக மழையளவு பதிவாகி யுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சராசரி மழைப் பதிவு 81.3மிமீ.
மீனவர்கள் மீட்பு:
பாலசோர் மாவட்டம் கீர்த்தானியாவி லிருந்து மீன் பிடிக்கச் சென்ற 17 பேர் கொண்ட குழுவில் 11 பேர் மீட்கப் பட்டுள்ளனர்.
நேற்று 2 மீனவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். ஆனாலும் 3 மீனவர்கள் நிலை என்ன வென்று இதுவரை தெரிய வில்லை. கலிமாட்டி கிராமத்தில் வெள்ள நீரில் பெண் ஒருவர் அடித்துச் செல்லப் பட்டார்.
Thanks for Your Comments