கிழக்கு டில்லியில் பட்டினியால் மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக,
அக்குழந்தைகள் விஷம் வைத்து கொல்லப் பட்டிருக்க லாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
குழந்தை களை வளர்க்க முடியாமல் தந்தையே மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாகவும்,
பின்னர் தலை மறைவாகி விட்ட தாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கில் 1,800 ரூபாய் பணம் இருந்தது என்றும், இதனால் பட்டினி கிடக்க வாய்ப்பில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித் துள்ளது.
மேலும், தந்தை மங்கல் சிங் ஜூலை 23 அன்று இரவு வெந்நீரில் மர்ம மருந்தை கலந்து சிறுமி களுக்கு கொடுத்துள்ளார்.
இதனால் அந்த குழந்தை களுக்கு வயிற்றில் ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது பிரேத பரிசோதனை யில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு பிறகு ஜூலை 24 காலை வரை மங்கல் சிங் வீட்டிற்கு திரும்ப வில்லை.
இது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையும் மோசமாக இல்லை.
அவர்கள் நல்ல உணவை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்துள்ளனர்.
இதனால் அவர்கள் பட்டினியால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.
Thanks for Your Comments