திருப்பூரில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர், கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர், கருமாரம் பாளையத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி, 47; 'சி.எஸ்., கார்மெண்ட்ஸ்' பெயரில், பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இவர், இரு நாட்களுக்கு முன் கடத்தி கொலை செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் சடலம் வீசப்பட்டது.
அவரது உடல், ஓசூரில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, ஆத்துப் பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப் பட்டது.
இச்சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு தொடர்பாக, கோவையை சேர்ந்த, அவரது நண்பர் விமல், 36;
கூலிப்படை யினரான, மணிபாரதி, 22, கவுதமன், 22, மூர்த்தி, 35 ஆகிய நான்கு பேரை திருப்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், வெளியாகி யுள்ள தகவல்: சிவமூர்த்திக்கும், விமலுக்கும் தொழில் ரீதியாக தொடர்புள்ளது. விமலுக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், சிவமூர்த்தி யிடம் பணம் கேட்டுள்ளார்.
கடன் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்த சிவமூர்த்தி, காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திர மடைந்த விமல், சிவமூர்த்தியை கடத்தி, பணம் பறிக்க, மூன்று மாதங்களுக்கு முன்பே திட்ட மிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மேட்டுப் பாளையம் தேக்கம் பட்டியை சேர்ந்த, தன் நண்பரான மூர்த்தியிடம், திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிவமூர்த்தியை, சுற்றுலா அழைத்து செல்வது போல் வரவழைத்து, பணம் பறிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், சிவமூர்த்திக்கு நேரமில்லாததால், அவர்களின் திட்டம் நிறைவேறுதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதை யடுத்து, கடந்த, 20ம் தேதி, சிவமூர்த்தியை கடத்த, விமல் தீவிரம் காட்டினார். அதன்படி, சிவமூர்த்தியை, தொழில் விஷயமாக பேச, காரில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, பணம் சம்பந்தமாக ஏற்பட்ட வாக்கு வாதத்தில், சிவமூர்த்தியை, விமல் தன் கூட்டாளி களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
சிவமூர்த்தி யின் சடலத்தை, தனியாக, ராமேஸ்வரம் கொண்டு செல்ல திட்டமிட்ட விமல், தன் முடிவை மாற்றி, கூட்டாளி களுடன், ஓசூர் சென்று, சடலத்தை, அங்குள்ள ஏரியில் வீசியுள்ளார்.
சிவமூர்த்தி யிடம் இருந்த மூன்று அலைபேசி களில் புளியம் பட்டியில் ஒன்றையும், கிருஷ்ண கிரியில், இரண்டையும் வீசியெறிந் துள்ளார்.
கைது செய்யப் பட்டுள்ள தேக்கம் பட்டியை சேர்ந்த மூர்த்தி மீது, காரமடை, மேட்டுப் பாளையத்தில் அடிதடி உட்பட சில வழக்குகள் உள்ளன.இவ்வாறு, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை யாளிகள் சிறையில் அடைப்பு
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப் பட்டனர்.
காரின் எண், அனைத்து மாவட்ட போலீசாருக்கு தெரியப் படுத்தப்பட்டு, சோதனை சாவடிகள் கண்காணிக்கப் பட்டன.
கிருஷ்ணகிரி டோல் கேட்டில், 26ம் தேதி, அதிகாலை, 2:30 மணி மற்றும் இரவு, 8:30 மணிக்கு காரின் எண் பதிவாகி யிருந்தது தெரிய வந்தது. இத்தகவலை மையமாக வைத்து, போலீசார் விசாரணையை துரிதப் படுத்தினர்.
வாணியம்பாடி - பள்ளி கொண்டானுக்கு இடைப்பட்ட ஜமீன் என்ற கிராமத்தில் காரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பணம், கார், பைக், கம்பளி உட்பட பொருட்களை, வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும், திருப்பூர் ஜே.எம்., கோர்ட்டில், நேற்று மாலை, 5:30 மணிக்கு ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments