மும்பை அந்தேரியில் அன்று காலை 7.06 மணியளவில் போரி வில்லியில் இருந்து சர்ச்கேட் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலானது திடீரென எமர்ஜன்சி பிரேக் அழுத்தி நிறுத்தப் பட்டது.
அப்படி மட்டும் நிறுத்தப் படாவிட்டால் அடுத்த சில நிமிடங்களில் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும். விபத்திலிருந்து ரயில் பயணிகளைக் காப்பாற்றியவர் மோட்டார்மேன் சந்திரசேகர் சவந்த்.
இது குறித்து சவந்த், ரயில் சர்ச்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தேரியில் வந்து கொண்டிருந்த போது பாலத்தில் விபத்து ஏற்பட்டதைப் பார்த்தேன்.
ரயில் முன்னேறிக் கொண்டிருக்க பாலத்தி லிருந்து சிமெண்ட் பலகைகள் சறிந்து கொண்டிருந்தன. உடனே எமர்ஜென்சி பிரேக்கை அழுத்தினேன். விபத்து பகுதியிலிருந்து வெறும் 60 மீட்டர் தள்ளி ரயில் நின்று விட்டது.
நல்ல வேளை பீக் ஹவர் என்பதால் ரயிலில் நிறைய பயணிகள் இருந்தனர் என்றார். சவந்தின் சமயோஜித புத்தியைப் பாராட்டிய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், மோட்டார்மேன் சந்திரசேகர் சவந்துக்கு நன்றி.
அவர், மின்சார லைன் துண்டிக்கப் பட்டு கீழே கிடப்பதைப் பார்த்தே ரயிலை நிறுத்தி யிருக்கிறார். அவரது சமயோஜித புத்தியால் விபத்து தவிர்க்கப் பட்டிருக்கிறது. அவருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
Thanks for Your Comments