மீண்டும் அழகிரி... கல்யாண வீட்டில் அதிரடி !

0
திமுகவில் ஒரு காலத்தில் தென்தமிழகம் அழகிரியின் கோட்டை யாக இருந்தது. தென் மண்டல அமைப்புச் செயலாளராக 
மீண்டும் அழகிரி... கல்யாண வீட்டில் அதிரடி !
தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கு திருமங்கலம் ஃபார்முலா உள்ளிட்ட பல சூத்திரங்களை வகுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அழகிரி மதுர குலுங்க குலுங்க.. வலம் வந்தார்.

அதன் பின்னர் மறை முகமாக இருந்த அண்ணன் தம்பி போட்டி வெளிப்படை யானது. ஸ்டாலின் Vs அழகிரி என்ற ஆரம்பித்த போரில் ஸ்டாலின் செயல் தலைவராகி விட்டார்.

அதுவும் கருணாநிதி உடல்நிலை நலிவடைந்த பின்னர்தான் என்றாலும் கருணாநிதி விருப்பப் பட்டால் கட்சியில் இணைவேன் என்ற

அழகிரியின் விருப்பத் துக்கு முற்றுப் புள்ளி விழுந்து விட்டது. அமைச்சர் பதவி முடிந்த பின்னர் ஆரவாரம் இல்லாமல் போய் விட்டார்.

மதுரையில் திரும்பிய பக்க மெல்லாம் அழகிரியின் போஸ்டர் இருந்த காலமும் உண்டு. அஞ்சா நெஞ்சர் முதல் ஆயிரமாயிரம் பட்டங்கள் தர தனியாக 11 பேர் கொண்ட குழுவே இருந்தது

என்றெல்லாம் கலாய்க்கப் பட்டாலும் கூட செம்ம மாஸ் என்ற ரேஞ்சில் ரேஞ்ச் ரோவரில் உலா வந்தவர். சமீப காலமாக அழகிரியின் முகவரி அமைதி என்றே இருக்கிறது. அவ்வப்போது ஏதாவது சொல்வார்.
அதுவும் சில நாட்களில் நீர்த்துவிடும். ஆனால், இன்று அவர் மதுரை பாலமேட்டில் தொண்டர் இல்ல விழாவில் பேசியதற்கு கொஞ்சம் எஃபெக்ட் அதிகம். நேரடியாகவே ஸ்டாலினைத் தாக்கிப் பேசி யிருக்கிறார்.

அவர் பேசியதாவது:

திமுகவில் உள்ளவர்கள் பதவிக் காகவே உள்ளனர் உண்மை யான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்.

மதுரையி லிருந்து திருமண விழாவிற்கு வருகின்றேனா அல்லது கட்சி நிகழ்ச்சிக்கு வருகின்றேன் என்று தெரியாமல் 

எனக்கு வரவேற்பு பேனர்கள் மாலை மரியாதை அணிவித்து என் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது.

திமுக வில் இப்போது உள்ளவர்கள் பதவிக்காகவே உள்ளனர் உண்மை யாகவே கட்சிக்கு உழைக்கா தவர்கள்.

செயல்படாத தலைவர் செயல் தலைவர் அவர் சென்னை யில் உள்ளார். செயல்படுகிற வீரர்கள் இங்கு தான் பாலமேடு பகுதியில் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். கடந்த மாதமும் இதே தொணியில் அவர் ஒரு கருத்தைத் தெரிவித் திருந்தார். 
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசும் போது, "திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும்,

தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும். உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள்" என்றும் அவர் கூறி யிருந்தார்.

தஞ்சாவூர் விழாவில் உதயநிதிக்கு நேரம் வரும் போது கட்சியில் பொறுப்பும் பதவியும் வரும் என்று ஸ்டாலின் பேசினார்.
அடுத்த நாள் ஸ்டாலின் சட்டப் பேரவைக்குச் சென்றார். இப்படி கட்சியில் உதயநிதி முன்னிலைப் படுத்தப்பட்டு வரும் சூழலில் தான் அழகிரி திமுகவில் இருப்பவர்கள் பதவிக் காகவே உள்ளனர் என

இரண்டாவது முறையாக அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி யிருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings