பார்மலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை !

0
பார்மலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு முன்னாள் ஆணையர் டாக்டர் எஸ்.இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார். 
பார்மலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை !
சென்னையில் பார்மலின் என்ற ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப் படுவதாக புகார் எழுந்தது. 

இந்த மீன்களைச் சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப் படுவதாக பரவிய தகவலால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மீன் விற்பனை பாதிக்கப்பட்டது. 

இதை யடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை செய்யப் படுவதாக தகவல் வெளியாகி யுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநராகவும், உணவுப் பாதுகாப்பு ஆணையராகவும் இருந்த டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:
பார்மலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை !
ஆறு, குளம், ஏரி, கிணறுகளில் பிடிக்கப்படும் மீன்கள் எளிதில் கெட்டுப் போகாது. ஆனால், கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விரைவாக கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. 

இதனால், சிலர் 60 சதவீதம் தண்ணீர், 40 சதவீதம் பார்மலின் கலவையில் கடல் மீன்களை மூழ்க வைத்து எடுக்கின்றனர். 

பார்மலின் கலந்த மீன்கள் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால், இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். 

ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங் களிலும் மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மலின் கலக்கின்றனர்.

இதே போல் மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க தண்ணீர், பிளீச்சிங் பவுடர் கலவையில் மூழ்க வைத்து எடுத்து பதப்படுத்தியும் விற்பனை செய் கின்றனர்.

புற்றுநோய் பாதிப்பு
பார்மலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை !
பார்மலின் கலந்த மீனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தற்போது தான் கடலில் இருந்து  பிடித்து வந்த மீன் போலவே இருக்கும். நல்ல மீனை சமைத்து சாப்பிடும் போது சுவை நன்றாக இருக்கும். 

இதுவே, பார்மலின் கலந்த மீனை சமைத்து சாப்பிடும் போது சுவை மாறுபடும். பிளீச்சிங் பவுடர் கலந்த மீனை எளிதில் கண்டு பிடித்து விடலாம். 
பிளீச்சிங் பவுடர் கலந்திருந்தால் மீன்களில் சிறிய அளவில் துர்நாற்றம் வீசும். பார்மலின் ரசாயனத்தை மனித உடல் ஏற்றுக் கொள்ளாது. 

இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகம், கண் நரம்புகள் பாதிக்கப்படும். 

இந்த உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது. இதே போல் பிளீச்சிங் பவுடர் கலந்த மீன்களை சாப்பிட்டாலும் உடல் நலம் பாதிக்கப்படும்.
பார்மலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை !
கேரள மாநிலம் கொச்சியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதை அறிவதற்கான கருவி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அந்த கருவிகளை பெற்று மீன் மார்க்கெட்களுக்கு சென்று மீன்களில் ரசாயனம் கலந்திரு க்கிறதா என்பதை சோதனை செய்யலாம்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் - 2006 சட்டத்தை பயன்படுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மீன்வளத் துறையும், உணவுப் பாதுகாப்புத் துறையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது மக்களுக்கு தரமான மீன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆதாரம் இல்லை
பார்மலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை !
பார்மலின், பிளீச்சிங் பவுடரை கலந்தால் மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்கு எந்த ஆராய்ச்சியும், 

ஆதாரமும் இல்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவும், 

உறவினர்கள் வருவதற்கு தாமதமாகும் நேரத்தில் இறந்த உடல்களை பதப்படுத்தவும் பார்மலின் திரவம் பயன்படுத்தப் படுகிறது. 

விலங்குகளின் உடல்களும் பார்மலின் பயன்படுத்தி பதப்படுத்தி வைக்கப் படுகிறது. இதற்கு தான் பார்மலினை பயன்படுத்து கின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அசைவ உணவகங்களில் மீன், நண்டு, இறால் போன்ற வற்றை உயிருடன் வைத்திருப்பார்கள். 

வாடிக்கை யாளர்கள் எதை கேட்கிறார்களோ, அதனை உயிருடன் பிடித்து சமைத்துக் கொடுப்பார்கள். 

ஆனால், நமது நாட்டில் உள்ள எந்த உணவகத்திலும் உயிருடன் இருக்கும் மீன்களை வைத்திருப்ப தில்லை. 

இறந்த மீன்களையே சமைத்துக் கொடுக்கின்றனர். இவ்வாறு எஸ்.இளங்கோ கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings