அவருடைய ஐந்த மகள்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக 7-ம் வகுப்பில் பள்ளிப் படிப்பை விட்ட எம்.எல்.ஏ. மீண்டும் படிப்பை தொடங்கி யுள்ளார்.
எம்.எல்.ஏ. பேசுகையில், என்னுடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றிய போது உயிரிழந்து விட்டார், அதன் பின்னர் நான் பள்ளிக்கு செல்ல வில்லை.
எங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற விவசாய தொழிலை செய்ய தொடங்கினேன் என்கிறார். அவர் அரசியலுக்கு வந்த பின்னர் படிப்பை தொடங்கும் படி அவருடைய மகள்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.
என்னை படிக்க சொல்லி பல முறை வலியுறுத்து வார்கள். நீங்கள் அதிகாரிகள், படித்தவர்களுடன் ஆலோசிக்க வேண்டியது வரும் நீங்கள் படிக்க வேண்டும் என்று ஊக்க மளிப்பார்கள்.
ஆனால் நான் முட்டாள் தனமாக என்னுடைய வயதை பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பேன். இப்போது என்னுடைய மகள் களுடைய பேச்சுதான் உண்மை யானது என உணர்ந்துக் கொண்டேன்.
மக்களை படிக்க வேண்டும் என்று கூறிய நான், நானே படிக்க வில்லை என் மனசாட்சி எனக்கு புரிய செய்தது, இதனை யடுத்து என்னுடைய படிப்பை தொடர முயற்சியை மேற் கொண்டேன் என புன்னகையுடன் கூறுகிறார் மீனா.
அவருடைய மூன்றாவது மகள் தீபிகா பேசுகையில், என்னுடைய தந்தையின் பணி இதில் முக்கியமானது. அவர் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேற்றி பெற்று விட்டார். இப்போது பட்டப் படிப்பை தொடங்கி யுள்ளார்.
நாங்கள் அவரால் பெருமை யடைகிறோம் என கூறியுள்ளார். மீனா அரசியலில் இருப்பதால் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாது. அவருக்கு அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் சஞ்சய் லுனாவாத் பாடம் சொல்லி கொடுத்துள்ளார்.
எம்.எல்.ஏ. தன்னுடைய முதுநிலை பட்டப் படிப்பையும், பிஎச்.டியையும் முடிக்க திட்ட மிட்டுள்ளார்.
Thanks for Your Comments