மாங்காடு அடுத்த கொளப்பாக் கத்தில், யுகேஜி சிறுமிக்கு பள்ளி வேன் ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக
புகார் எழுந்ததால், 200-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகை யிட்டனர்.
வேன் ஊழியரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவரு கின்றனர்.
மாங்காடு அடுத்த கொளப்பாக் கத்தில் லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது.
எல்கேஜி முதல் பிளஸ்2 வரை உள்ள இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
தொலைவில் உள்ள மாணவர்கள் வந்துசெல்ல, பள்ளி சார்பில் பேருந்து, வேன் இயக்கப் படுகிறது.
இந்நிலையில், இப்பள்ளியில் யுகேஜி படிக்கும் பெண் குழந்தை, பள்ளியின் வேன் நடத்துநர் தன்னிடம் தவறாக நடந்ததாக கூறி, நேற்று பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார்.
இது பற்றி, வேன் நடத்துநர் பாஸ்கரிடம் பெற்றோர் விசாரித் துள்ளனர். அப்போது, அவர் தகாத வார்த்தை களால் அவர் களை திட்டியதாக கூறப் படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத் தினர் அவரை அடித்து, உதைத்து பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
சம் பவம் குறித்து மாங்காடு போலீ ஸுக்கும் தகவல் கொடுக்கப் பட்டது.
இதற்கிடையில், இதுபற்றிய தகவல் மற்ற பெற்றோர்கள் மத் தியில் பரவியது.
தங்கள் பிள்ளை களும் பாதிக்கப் பட்டிருக் குமோ என்ற சந்தேகத்தில், 200-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர்.
பள்ளியை முற்றுகை யிட்டு கோஷ மிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இதை யடுத்து, அவர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகி உடனே அங்கு வந்து, விளக்கம் அளிக்க வேண்டும் என்று பெற்றோர் கூறினர்.
‘சம்பந்தப்பட்ட வேன் ஊழியர் பாஸ்கர் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.
வேறு ஊழியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந் தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று
பள்ளி நிர்வாகமும், போலீஸாரும் உறுதி அளித்தனர். இதை யேற்று, பெற்றோர், பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து பெற்றோர் கூறிய போது, ‘‘பள்ளி வேனில் நடத்துநராக வேலை செய்யும் பாஸ்கர், பள்ளி சிறுமிகள் பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தை நம்பிதான் குழந்தைகளை பேருந்து, வேனில் அனுப்புகிறோம்.
ஊழியர்கள் கண்ணியமாக நடந்து கொள்கிறார் களா என்பதை பள்ளி நிர்வாகம் தான் கண்காணிக்க வேண்டும்.
காவல், கல்வி, போக்கு வரத்து துறைகள் இணைந்து, இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர்.
இதற்கிடையில், வேன் ஊழியரான கொளப்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரை போலீஸார் கைது செய்தனர்.
Thanks for Your Comments