அரபு நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சிரியாவும இடம் பெற்றுள்ளது. இஸ்ரேலின் எல்லையில் சிரியா அமைந்துள்ளது.
இதனால் எல்லையில் இரு நாடுகளு க்கும் இடையே மோதல் நடப்பது உண்டு. சிரியாவை ஒட்டி கோலன் ஹைட்சில் என்ற இடம் உள்ளது. இந்த இடம் இஸ்ரேலின் கட்டுப் பாட்டில் இருக்கிறது.
தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் கிளர்ச்சி படையினர் கட்டுப் பாட்டில் யார்மேக் என்ற இடம் இருக்கிறது. இது, இஸ்ரேலின் கோலன் ஹைட்சில் அருகே அமைந்துள்ளது.
யார் மேக் பகுதியில் கிளர்ச்சி படையினரை தாக்குவதற் காக சிரியாவின் சுகோய் ரக போர் விமானம் பறந்து சென்றது.
அது, இஸ்ரேலின் கோலன் ஹைட் சில் பகுதியில் நுழைந்து விட்டதாக தெரிகிறது. இதனால் இஸ்ரேல ஏவுகணை மூலம் அந்த விமானத்தை சுட்டது. இதில் நடுவானில் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது.
ஆனால், இந்த தகவலை இரு நாடுகளுமே உறுதிப்படுத்த வில்லை. ஆனால், அந்த பகுதி மக்கள் நேரில் காட்சியை பார்த்ததை உறுதிப் படுத்தி உள்ளனர்.
சிரியாவில் இருந்து வரும் பத்திரிகைகளும் இஸ்ரேல் செய்தி நிறுவனமும் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதை உறுதிப்படுத்தி செய்தி வெளி யிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த விமானியின் கதி என்ன? என்பது தெரிய வில்லை.
Thanks for Your Comments