மரணத்தை வெல்லும் கருணாநிதி - காவேரி மருத்துவமனை அதிசயம் !

0
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில், திடீரென பின்னடைவு ஏற்படுவதும், பின், இதயத் துடிப்பு சீராகி, 
அவர் ஆபத்து கட்டத்தை தாண்டு வதுமாக இருப்பது, மருத்துவ அதிசயம் என, டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக, 19 மாதங்களாக, அரசியல் பணிகளி லிருந்து விலகி, சென்னை, கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார், கருணாநிதி 94.

கவலைக்கிடம்

இம்மாதம், 18ம் தேதியில் இருந்து, அவரது உடல் நலத்தில், ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

அதற்கு உரிய சிகிச்சை எடுத்த நிலையில், சென்னை, காவேரி மருத்துவ மனையில், மூன்று நாட்களாக, அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

வயது முதிர்வு, சிறுநீரக தொற்று, ரத்த அழுத்தம் குறைவு காரணமாக, அவரின் நாடித் துடிப்பு குறைந்ததால், நேற்று முன்தினம் மாலையில், 

அவர் கவலைக் கிடமான நிலைக்கு சென்றதாக, அவரது குடும்பத்தினரிடம், டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.


அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு, கனிமொழி, அமிர்தம் உள்ளிட்ட, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், 

கருணாநிதி யின் படுக்கையை சுற்றி நின்று, துயரம் தாங்காமல் அழுது உள்ளனர். 

பின், குடும்பத்தினர் அனைவரும், கருணாநிதியின் காலை தொட்டு வணங்கினர். 

இந்த நிகழ்வு நடந்த சில நிமிடங்களில், செயலற்று கிடந்த கருணாநிதியின் உடலில், திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

தலை, கை, கால்களை, லேசாக அசைக்கத் துவங்கி உள்ளார்.

அதைத் தொடர்ந்து, குறைந்து கொண்டே வந்த, அவரது நாடித் துடிப்பு, மெல்ல சீராகத் துவங்கியது. அதைப் பார்த்து, டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

கருணாநிதியின் உடல் நிலையில், திடீரென பின்னடைவு ஏற்படுவதும், பின், தானாக இதயத் துடிப்பும், 

நாடித் துடிப்பும் சீரடைவதுமாக இருப்பதால், டாக்டர்களால், எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

உடலில் பாதிக்கப் பட்டுள்ள உறுப்புகள், சீராக இயங்குவதற்கு தேவையான சிறப்பு மருந்துகளும், ஊசி மூலம் செலுத்தப் பட்டுள்ளன. 

அந்த மருந்துகள், 48 மணி நேரம் வரை சீராக இயங்க வைக்கும் என்றும், அதன்பின், 

அவரது உடல் உறுப்புகளின் செயல் பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, தொடர் சிகிச்சை அளிக்கவும், டாக்டர்கள் குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மருத்துவ மனைக்கு வெளியே, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான, தி.மு.க., 

தொண்டர்கள், திரண்டு வந்து, 'கருணாநிதி யின் உயிரைக் காப்பாற்றுங்கள்' என, பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

அவரது உடல் நலம் விசாரிக்க, துணை ஜனாதிபதி, கவர்னர் என, அனைத்து கட்சிகளின் டில்லி தலைவர்கள், மாநில தலைவர்களும், மருத்துவ மனைக்கு வந்துள்ளனர்.

சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என, ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர் களும், கருணாநிதியை நலம் விசாரிக்க வந்துள்ளனர். 

இது, எந்த ஒரு கட்சியின் தலைவருக்கும் கிடைக்காத பெருமை. கருணாநிதியை சந்திக்க வரும் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், 

திரைக் கலைஞர்கள் மட்டும், கருணாநிதி அனுமதிக்கப் பட்டிருக்கும், நான்காவது மாடியில் உள்ள, ஸ்டாலின் அறைக்கு, அழைத்து செல்லப் படுகின்றனர்.


சிறிய கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் 

போன்றவர்கள், கீழ்தளத்தில் உள்ள அறையில் அமர வைக்கப் படுகின்றனர். 

தினமும், இரு முறை கீழே உள்ள அறைக்கு வந்து, பார்வை யாளர்களை சந்தித்து பேசி அனுப்புகிறார், ஸ்டாலின்.

நான்காவது தளத்தில், ஸ்டாலின், செல்வி, கனிமொழி, அழகிரி, சண்முகநாதன் போன்ற வர்களுக்கு மட்டும், தனி அறைகள் எடுக்கப் பட்டுள்ளன.

ஆச்சரியம்

இரவில், செல்வி, கனிமொழி ஆகியோர், தினமும் தங்கள் அறைகளில் தங்கி, கருணாநிதி யின் உடல் நலம் குறித்து, கவனித்து வருகின்றனர். 
கருணாநிதி அனுமதிக் கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவின் அருகில் அனுமதிக்கப் பட்டிருந்த, இரண்டு நோயாளிகள், வேறு தளத்திற்கு மாற்றப் பட்டுள்ளனர். 

கருணாநிதியை விட மூத்தவரும், நெருங்கிய நண்பருமான, தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன், தினமும், இரு முறை மருத்துவ மனைக்கு வந்து செல்கிறார்.

தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கருணாநிதியைப் போலவே, அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடும், வித்தியாச மாகவும், ஆச்சரிய மாகவும் இருக்கிறது. 

அவர் ஒரு அரசியல் போராளி. தன்னை பற்றி, உலகத்தமிழர்கள் பேச வேண்டும் எனக்கருதுவார்.

அதனால் தான், அவர் உடல் நலிவுற்று, மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் போதும், 

உலக நாடுகளில் வாழும் தமிழர்கள், அவரைப் பற்றி, தற்போது பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings