சோதனைகளை கடந்து சாதிக்கும் மாணவன் சீனிவாசன் !

0
வயது 18 தான் ஆகிறது ஆனால் தினமும் இருவேளை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் சீனிவாசக பாண்டியனுக்கு..
சோதனைகளை கடந்து சாதிக்கும் மாணவன் சீனிவாசன் !
ஆனால் வறுமை காரணமாக ஒரு வேளை மட்டுமே போட்டுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை

நான் இருக்கேன்டா மகனே என்று ஆறுதல் சொல்லி மகனை தேற்ற வேண்டிய அப்பாவும் இறந்து விட்டார்.

ஒட்டலில் ஒன்றில் அறைகளை சுத்தம் செய்யும் 'ஸ்வீப்பர்' வேலை செய்யும் அம்மாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் 

வீட்டு வாடகை உள்ளீட்ட அனைத்து செலவு களையும் செய்து கொண்டு தாயும் பிள்ளையு மாக இருக்கின்றனர்.

இளவயதிலேயே கணவரை இழந்தாலும் தனக்காக உழைத்து உழைத்து உருகும் தாயை நல்ல சாப்பாடு கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், 

அதற்கு ஒரே வழி படித்து முன்னேறிக் காட்டுவது மட்டுமே என்பதை லட்சிய மாகக் கொண்ட பாண்டியன் படிப்பில் நல்ல அக்கறை காட்டி வருகிறார்.

நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் ஆயிரத்து நுாறு மார்க்குகள் எடுத்து மதுரை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல் மாணவனாக வந்துள்ளார்.

இதற்காக பள்ளியின் சார்பில் கிடைத்த பாராட்டையும் சான்றி தழையும் மட்டும் 
வைத்துக் கொண்டு மேற்கொண்டு படிக்க வழிவகை தெரியாது தவித்துக் கொண்டு இருந்தார்.

இவரது தவிப்பையும் தாயாரின் கண்ணீரையும் துடைக்க முடிவு செய்த மணிகண்டன் அவரால் முடிந்த உதவி செய்தார் 

ஆனால் அவரது உதவியையும் தாண்டி பாண்டியனின் தேவைகள் இருக்கவே மனித நேயம் கொண்ட சிலரிடம் அழைத்துச் சென்றார், சிலரை அடையாளம் காட்டினார்.

அந்த நல்ல உள்ளங்களின் உதவியால் தற்போது மதுரை தியாகராசர் கல்லுாரி யில் இளங்கலை பட்ட படிப்பு படிக்க உள்ளார்.

அவருக்கு மேற்கொண்டு ஏதாவது உதவி தேவையா ? என்பதை தெரிந்து கொள்ள 

மதுரை நரிமேடு மீனாம்பாள் புரத்தில் உள்ள சீனிவாசன் வீட்டிற்கு நேற்று போயிருந்தேன்.

மணிகண்டன் வழிகாட்டுதலில் நேத்ராவதி ரமேஷ் அழைத்துச் சென்றார்.

நான் நினைத்ததை விட சீனிவாசன் வீடு ஏழ்மையாக இருந்தது.ஒரே ஒரு மாடி அறை அதில் சின்ன தடுப்பு வைத்து சமைத்துக் கொள்கின்றனர், 
சோதனைகளை கடந்து சாதிக்கும் மாணவன் சீனிவாசன் !
வீட்டின் நடுவில் பழைய இரும்பு கட்டில் அதில் விரிப்பு கூட இல்லாமல் காணப் பட்டது.

வீட்டில் நிறைந்து இருந்தது புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள் தான் ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள் நிறைந்து காணப்பட்டது.

''சீனிவாசன் சினிமாவிற்கு போக மாட்டான் வௌியே சுற்ற மாட்டான் டி.வி.,கூட பார்க்க மாட்டான் எப்ப பார்த்தாலும் படிச்சுட்டு தான் இருப்பான், 

ரொம்ப நல்ல பிள்ளைய்யா நல்லா படிப்பான் அவன் விருப்பப்படி படிக்க வைக்க கடவுள் தான் கருணை காட்டணும்'' 

என்றார் சீனிவாசனின் தாய் விஜயா, சொல்லும் போதே அவரது கண் கலங்குகிறது.

''என் அம்மா மாதிரி இருக்கிறவங்க நிம்மதியா சந்தோஷமா வாழ வழிகாண வேண்டும், 

என்னை மாதிரி படிக்க நினைக்கிற மாணவர் களுக்கு பணம் ஒரு தடைய இருக்கக் கூடாது, ஏழ்மை என்பதே இருக்கக் கூடாது 

இதற்கெல்லாம் திட்டம் போட்டு செயல்படணும் அதற்கு நான் கலெக்டராகணும், 

ஆவேன் அதற்கு ரொம்பவே தயராகிட்டு இருக்கேன்'' என்கிறார் சீனிவாசன் உறுதியாக.

சீனிவாசனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது தன் நோயின் தன்மையை, ஏழ்மையை, 

இயலாமைமை ஒரு போதும் வௌிப்படுத்த வில்லை, நேர்மையும் நெஞ்சுரமும் லட்சியமும் கொண்ட வராகவே தென்பட்டார்.
இவருக்கு ஒரு லேப்டாப் தேவைப் படுகிறது ஐஏஎஸ் பயிற்சி பற்றிய ஆலோசனை யும் அதற்கான கட்டணமும் தான் 

இப்போதைய இவரின் தேவை, இவரின் தாய் நாலாயிரம் சம்பளத்திற் காக நீண்ட துாரம் சென்று நீண்ட நேரம் உழைத்து வீடு திரும்புகிறார் 

இவருக்கு வீட்டு பக்கத்திலேயே ஒரு வேளை கிடைத்தால் மகனை இன்னும் நன்றாக பார்த்துக்கொள்வார்... நன்றி - தினமலர்

சீனிவாசக பாண்டியனிடம் பேசுவதற் கான எண்:9944274953.

-எல்.முருகராஜ்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings