மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டு பெற்ற கல்லூரி மாணவி ஒரே நாளில் பிரபலமாகி விட்டார்.
பிரதமர் கையெழுத்தை பார்க்க ஏராள மானோர் அவரது வீட்டுக்கு படையெடுத் துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய பலரும் முன் வந்துள்ளனர்.
மோடி கூட்டத்தில் விபத்து
மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ரீடா. உள்ளூரில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாத துவக்கத்தில் மிட்னாபூரில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் நடந்தது.
இதில், ரீடா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூடாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் ரீடா உட்பட 96 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் உள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சேர்க்கப் பட்டனர். அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற, பிரதமர் மோடி சென்று இருந்தார். அப்போது ரீடா அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார்.
துண்டு காகிதத்திற்கு மவுசு
பிரதமர் மோடி அங்கு படுக்கை மீது இருந்த துண்டு காகிதத்தில், ' சந்தோஷ மாக இருங்கள் ரீடா' என்று எழுதி தனது கையெழுத்தை யும் போட்டு கொடுத்தார்.
இதன் வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இத்துடன் தனது கிராமத்தில் ரீடா மிகவும் பிரபலமாகி விட்டார்.
அவரது வீட்டில் இருந்து பிரதமர் மோடியின் கையெழுத்தை காண தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இத்துடன், ரீடாவையும், அவரது சகோதரியையும் திருமணம் செய்ய பலர் முன் வந்துள்ளனர். ஆனால், ' படிப்பு தான் முக்கியம்' என்று ரீடா கூறி விட்டார்.
Thanks for Your Comments