கேரளாவில், விளை நிலத்தில் நுழைந்த காட்டு யானை, கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.
அதன் உடலை மீட்க வரவழைக்கப் பட்ட மண் அள்ளும் இயந்திரம் கவிழ்ந்து, இளைஞர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விளை நிலம் :
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள இடுக்கி மாவட்டம், கஞ்சிகுழி அருகே, வனப் பகுதியில் இருந்து, ஆறு யானைகள் நுழைந்தன.
ஜோசப் என்பவரது விளை நிலத்தில், தென்னை உள்ளிட்ட விளை பொருட் களையும்,
மாட்டு கொட்ட கையையும் சேதப்படுத்தி, அருகில் உள்ள வயலுக்குள், யானைகள் நுழைந்தன.
தலைகீழாக :
அப்போது, ஒரு பெண் யானை, அங்கிருந்த கிணற்றுக் குள் தலைகீழாக விழுந்தது.
வெளியில் வர முடியாத அந்த யானை, தண்ணீரில் மூழ்கி இறந்தது; மற்ற யானைகள் வனத்திற்குள் சென்றன.
யானையின் உடலை கிணற்றில் இருந்து மீட்பதற்கு, மண் அள்ளும் இயந்திரம் வரவழைக்கப் பட்டது.
அந்த இயந்திரத் துடன், யானையின் உடலை மீட்பதற்காக, ஜோபிஷ்சாக்கோ, 28, என்பவரும் சென்றார்.
அப்போது, மண் அள்ளும் இயந்திரம் எதிர் பாராத விதத்தில் கவிழ்ந்தது; அதில் சிக்கி, ஜோபிஷ்சாக்கோ இறந்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Thanks for Your Comments