தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது.
இதனால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்தும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.
பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில பெய்த
கன மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 10ம் தேதி முதல் அணைக்கு அதிக பட்சமாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியும்,
குறைந்த பட்சமாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருந்தது.
அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்ந்ததால் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப் பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பவானி ஆறு மற்றும் ஈரோடு மாவட்டம் மாயாறு ஆகிய வற்றை ஆதாரமாக கொண்ட பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து.
நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 3864 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் நீர் மட்டமானது 96 அடியை தொட்டது. அணையி லிருந்து வினாடிக்கு 1605 கன அடி தண்ணீர் வெளியேறு கிறது.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், நீர்தேக்கப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி யளிக்கின்றது.
இதன் காரணமாக கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்கா புரத்தில் இருந்து
காந்த வயலுக்கு செல்லும் வழியில் காந்தை யாற்றின் குறுக்கே கட்டப் பட்ட உயர் மட்ட பாலம் நீரில் மூழ்கியது.
20 அடி உயரத்தில் கட்டப்பட்ட பாலம் நீர் நிறைந்து காணப் படுகின்றது. பாலத்தின் மீது பஸ், லாரி, வேன்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
பாலம் முழுவதும் மூழ்கி விட்டதால் மலை கிராம மக்கள் காந்த வயல் பகுதியில் இருந்து
பரிசல் மூலம் பவானி ஆற்றைக் கடந்து லிங்கா புரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வனத்துறை சோதனைச் சாவடி அருகே கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப் பட்டுள்ள
எச்சரிக்கை பலகையில் காந்த வயல் செல்லும் பாலத்தைக் கடக்கவோ, நீர்த்தேக்கங் களில் குளிக்கவோ வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments