ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து ஏமாற்றிய இளைஞன் !

0
யாரை நம்புறது.. யாரை நம்பக் கூடாதுன்னே தெரியறது இல்லை. கிழக்கு கடற்கு கடற்கரை சாலையில் உள்ளது கானாத்தூர் என்ற பகுதி. 
இங்கு போலீஸ் கட்டிங், நன்றாக ஷேவ் செய்த முகம், கம்பீரமான போலீஸ் உடையுடன் 

ஒரு இளைஞர் ஊரில் உலா வந்து கொண்டிருப்ப தாக கமிஷனர் விஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இது பற்றி என்ன, ஏதென்று விசாரித்து, அந்த நபர் யார் எனவும் கண்டு பிடியுங்கள் என என போலீசாருக்கு கமிஷனர் உத்தர விட்டார். 

இந்த உத்தர வினையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் நடவடிக்கையை துவங்கினர் போலீசார். 

அந்த நபர் யாராக இருக்கும் என்ற தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த நபருக்காக காத்திருந்தனர். 

இதற்காக ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டு அடையாறு முழுக்க சுற்றி சுற்றி வந்தனர். 

இந்நிலையில், நேற்று இரவும் இதே பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் போலீஸ் ஸ்டிக்கரும் ஒட்டப் பட்டிருந்தது. 

பாலமணி கண்டனின் லீலை பாலமணி கண்டனின் லீலை அந்த காருக்குள் ஒரு இளைஞர் இருந்தார். 

அவர் ஐபிஎஸ் அதிகாரிகள் யூனிபார்மில் இருக்கவும் போலீசார் பேச்சு கொடுத்தனர். 

ஆனால் ஆரம்பம் முதலே அந்த இளைஞர் குழப்பமாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் பதில் சொல்லவும், போலீசார் தீவிரத்திற்குள் இறங்கினர். 

இப்படி விசாரித்தால் சரியாக இருக்காது என்று கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விசாரணையை துவங்கினர். 

அப்போது தான் பொது மக்கள் கூறிய நபர் அவர்தான் என தெரிய வந்தது. 

மேலும் அந்த இளைஞர், வியாசர்பாடியை சேர்ந்த 33 வயதுடைய பால மணிகண்டன் என்பதும், 

ஐபிஎஸ் அதிகாரி போல உடை அணிந்து கொண்டு பெண்களை ஏமாற்றியவர் என்பதும் தெரிய வந்தது. 

நகை, பணம் அபேஸ் நகை, பணம் அபேஸ் முக்கியமாக பேஸ்புக்கில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லிக் கொண்டு பெண்களிடம் நைசாக பேச ஆரம்பிப்பாராம். 


பின்னர் காதலிப்பது போல பேசி, அந்த பெண்களை நேரில் வரவழைத்து தன்னுடைய அவர்களை பயன்படுத்தி நாசம் செய்ததும், 

அப்பெண்களின் நகை, பணங்களையும் பிடுங்கி கொண்டு நாசம் செய்து, தன் ஈனபுத்தியை காட்டி வந்துள்ளாராம் 

இந்த போலி ஐபிஎஸ் அதிகாரி. கார், லேப்டாப் பறிமுதல் கார், லேப்டாப் பறிமுதல் இதை யடுத்து, போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் போலீசார் இளைஞரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 2 காஸ்ட்லி செல்போன்கள், லேப்-டாப் போன்ற வற்றினையும் கைப்பற்றினர். 

மேற்கொண்டு அந்த போலி ஐபிஎஸ், என்னென்ன அட்டூழியங்கள் செய்தார், என்னென்ன முறை கேடுகளை அரங்கேற்றி யுள்ளார், 

இந்த உடையை அணிந்து கொண்டு ஜனங்களை ஏமாற்றி பணம் ஏதேனும் பறித்தாரா என்பன போன்ற விவரங்களை யெல்லாம் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள். 

புறத்தோற்றம் மாயம் புறத்தோற்றம் மாயம் அகத்தோற்றத்தை ஆராயாமலும், புரிந்து கொள்ளாமலும் 

புறத்தோற்றத்தை பார்த்து விழும் மனிதர்களால் தான் இது போன்ற முறை கேடுகளும், அநீதிகளும் நடக்கின்றன. 

ஒருவரின் நடை, உடை, பாவனை, பேச்சு, தோற்றம், இதை வைத்து ஒருவரை எடை போடும் போக்கு களையப்பட வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings