ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா என்ற செய்தி யாளர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின்
நேரம் வரும் போது முடிவைச் சொல்வேன் என்று கூறியதை, நடிகை குஷ்பு அதி புத்திசாலித் தனமான பதில் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர்
ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பின்னர் குஷ்பு செய்தி யாளர்களிடம் பேசினார்.
அப்போது, செய்தியாளர்கள் "அண்மையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
ஒரு பேட்டியில் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு,
ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லாமல் அவர் நேரம் வரும் போது முடிவை சொல்வேன் என்று கூறி யிருக்கிறார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி யில் இருந்து கொண்டே மு.க. ஸ்டாலின் இப்படிச் சொல்வது சரியா'' என்று குஷ்புவிடம் ஒரு நீண்ட கேள்வியை கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த குஷ்பு, ''இது அதி புத்திசாலித் தனமான பதில்'' என்று கூறினார்.
மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்றும் குஷ்பு கூறினார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் பாஜகவுக்கு மாற்றாக 3வது அணியை அமைக்க முயற்சித்து வருகின்றனர்.
3வது அணியைக் கட்ட முயற்சித்த மம்தா பானர்ஜி ஆதரவு திரட்டினார்.
இது தொடர்பாக அவர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்
மாநிலங்களின் ஒற்றுமைக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதே நேரத்தில், 3வது அணியை அமைப்பார்கள் என்று கருதப்பட்ட மம்தா பானர்ஜி,
மாயாவதி இருவரும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் விதமாக செயல் பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments