மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து, கவுகாத்தி வழியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத் திற்கு ஏர் ஆசியா விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.
அந்த விமானம் தரை இறங்கு வதற்கு முன்பாக, விமான ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்றார்.
அப்போது குறை மாதத்தில் கரு ஒன்று ரத்தக் கறையுடன் அங்கு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, விமான பணியாளர் களுக்கும், விமான மேலாளரு க்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டது.
பின்னர் விமானம் தரை யிறங்கியதும் அங்கு வந்த போலீசார், யாரையும் கீழே இறங்க விடாமல் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் கழித்து ஆண் பயணிகள் மட்டும் முதலில் விடுவிக்கப் பட்டனர்.
அதன் பின்னர் நடந்த நெடுநேர விசாரணையில் 19 வயது விளையாட்டு வீராங்கனை ஒருவர் சிக்கினார்.
அவர் தான் இந்த கருவை பிரசவித்தார் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர் குறித்து எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்க வில்லை.
இதை யடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது
விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தை பெற்று குறைமாத சிசுவை வீசியது வெளிச்சத்து க்கு வந்துள்ளது.
இதை யடுத்து, விளையாட்டு வீராங்கனையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார், விசாரணையின் போது, கர்ப்பமாக இருப்பதை நான் அறிந்து இருக்க வில்லை என்று வீராங்கனை தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் மேலும் கூறும் போது, “விமானத்தில் ஏறுவதற்கு முந்தைய நாள்
தொடர் வலி இருந்ததா கவும், இதனால், வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்டதாக தெரிவித் துள்ளார்.
எனவே, அவர் உட்கொண்ட மருந்துகள் கரு கலைய காரணமாக இருந்து இருக்குமா? என மருத்துவர் களிடம் ஆலோசனை பெற்று வருகிறோம்.
டேக்வொண்டோ விளையாட்டு பயிற்சியின் போது, காயம் அடைந்து இருக்க கூடும் என அப்பெண் கூறியிருப்ப தால்,
அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பெண்ணின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதால்,
அவரால் தென் கொரியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது” என்றனர் போலீசார்.
Thanks for Your Comments