தினகரன் வீட்டின் முன் நடந்தது என்ன?

0
சசிகலாவின் அக்கா மகனும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வு மான தினகரன் வீட்டின் முன், 
உருவ பொம்மை எரித்த போது, திடீரென மர்மப் பொருள் வெடித்து சிதறியது. 

இதில், நான்கு பேர் காயம் அடைந்தனர். அதனால், பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததா; 

கொடும்பாவி எரிக்கப்பட்டதா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற, கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். 

காஞ்சிபுரத்தில், சில தினங் களுக்கு முன், அக்கட்சி சார்பில், பொதுக்கூட்டம் நடந்தது. 

அப்போது, காஞ்சிபுரம் நகர செயலர், 'புல்லட்' பரிமளம், 52, முன்னாள் எம்.எல்.ஏ., பெருமாள் ஆகியோரு க்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதை யடுத்து, 27ம் தேதி, பரிமளம் மற்றும் அவரது மனைவி உமா மகேஷ்வரி ஆகியோரை, கட்சியில் இருந்து, தினகரன் நீக்கினார். 

இதனால், அதிருப்தி அடைந்த பரிமளம், நேற்று மதியம், 'இன்னோவா' காரில், சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்றார். 


அவருடன், கார் டிரைவர் சுப்பையா என்பவரும் இருந்தார்.சில காகிதங் களுடன் திடீரென தினகரனின் வீட்டிற்குள் செல்ல, பரிமளம் முயன்றார். 

அவரை, தினகரனின் கார் டிரைவர் பாண்டித்துரை, புகைப்படக் கலைஞர் டார்வின், காவலாளி மோகன்

 மற்றும் ஆட்டோ டிரைவர் பரமசிவம் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினரு க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில், பரிமளம் திடீரென காரின் டிக்கி அருகே, பிளக்ஸ் பேனரால் செய்யப்பட்ட தினகரன் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தார். 

இதை, பாண்டிதுரை, 52, டார்வின், 28, பரமசிவம், 52, ஆகியோர் தடுக்க முயன்றனர்.

அப்போது, திடீரென உருவ பொம்மை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. குபீரென தீ பிடித்தது. 

பரிமளத்தை தடுக்க முயன்ற மூவருக்கும், பலத்த தீக்காயம் ஏற்பட்டது. 

பரிமளத்தின் மீதும் தீ பற்றியதால், அவர் உடைகளை கழற்றி வீசி விட்டு அரை நிர்வாண கோலத்தில் ஓட்டம் பிடித்தார். 

விபத்தில், காரும் சேதமடைந்தது. நான்கு பேரும், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வெடிகுண்டா?இது தொடர்பாக, தினகரனின் கார் டிரைவர் பாண்டித்துரை, போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், 'பரிமளம் தன் காரில் இருந்து, பலத்த சத்தத்துடன் வெடிக்க கூடிய மர்மப் பொருளை எடுத்து கொளுத்தினார். 

'இதனால், எங்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. 

அந்த மர்ம பொருள் வெடிகுண்டா என, விசாரித்து, பரிமளம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிந்து, பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததா, 

உருவ பொம்மைக்குள் பெட்ரோல் குண்டு பதுக்கி வைக்கப் பட்டிருந்ததா என, விசாரித்து வருகின்றனர்.

பரிமளம், சுப்பையா ஆகியோர் மீது, கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்தனர். நேற்று இரவு, 

பரிமளத்தின் கார் டிரைவர் சுப்பையாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணை தொடர்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings