பரங்கிமலை ரயில் விபத்தில் போலீஸார் மற்றும் ரயில்வே ஊழியர்களே உடல் களைத் தொடத் தயங்கிய போது சக மனிதர்களாய் களத்தில் இறங்கி காயம் பட்டவர்களுக்கு
உதவிய ரியல் ஹீரோக்களான மூன்று இளைஞர் களுக்குப் பாராட்டு குவிகிறது. இளைய தலை முறையின் வேகம் கட்டுக் கடங்காதது.
அதை முறைப்ப டுத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்ட சக்தி சமுதாயத்திற்கு உதவும் விதத்தில் மாறும். இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன.
சமீப காலமாக முக்கியமான பேரிடர் நேரங்களில் இளைஞர்களின் உதவும் மனப்பான்மை பாராட்டும் விதமாகவும் நெகிழும் விதமாகவும் உள்ளது.
2015-ம் ஆண்டு சென்னையை விழுங்கிய பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காக்கவும், நிவாரணப் பணிகளிலும்,
பின்னர் உதவும் பணியிலும் இளம் தலை முறையினர் ஆற்றிய பணி ஈடு இணை யில்லாதது.
இதைப் பல சந்தர்ப்பங் களில் சென்னை கண்டுள்ளது. சமீபத்திய நிகழ்வு பரங்கிமலை ரயில் விபத்து.
அன்று காலை வழக்கம் போல் பரபரப்புடன் விடிந்தது. நேற்று பரங்கி மலையில் தண்ட வாளத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி
இரண்டு பயணிகள் உயிரிழந்து விட்டார்க ளாம் என்று பேசியபடி கடற்கரை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அதில் இருப்பவர் களுக்குத் தெரியாது நாமே செய்தியாகப் போகிறோம் என்று.
அன்று பல குடும்பங்களின் நிம்மதியை வாழ்நாள் முழுவதும் தொலைக்கும் அந்த சம்பவத்துக்கு முன்னோடி யாக
மாம்பலம் கோடம்பாக்கம் இடையே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் ரயில் சேவை பாதித்து காலை 6 மணியி லிருந்து 5 ரயில்கள் ரத்து செய்யப் பட்டது.
7.45 வரை ரயில்கள் கிளம்பாத தால் அத்தனை ரயிலிலும் செல்ல வேண்டிய மொத்த பயணிகளின் எண்ணி க்கையும் கூடியது.
மாணவர், இளைஞர், வேலைக்குச் செல்வோர், உறவினர்களை பார்க்கச் செல்வோர் என
ஆணும் பெண்ணுமாய் கூட்டம் நிரம்பி வழிய 7.45 ரெயிலில் அத்தனை கூட்டமும் முண்டி யடித்தது.
தொங்கிய படியாவது பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள்,
பயனிகள் தொங்கியபடி செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் டிராக்கில் ரயிலை மாற்றி விட்டனர்,
குறிப்பிட்ட சில ஸ்டேஷன் களில் மட்டுமே நிற்கும் திருமால்பூர் அதிவிரைவு பாசஞ்சர் ரயில் பரங்கிமலை வந்த போது வேகமாக அந்த ரயில் நிலைய த்தைக் கடந்தது.
அப்போது தான் அந்த விபத்து நிகழ்ந்தது. அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் அந்தப் பாதையில் பயணிகள்
ரயில் பெட்டியின் கதவுகள் மூடியிருக்கும் என்பதால் பெட்டிக்கு நெருக்கத்தில் பக்கவாட்டுச் சுவர் இருந்தும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் அதே பாதையில் சாதாரண பாசஞ்சர் ரயில் அதுவும் முழுதாகப் பயணிகள் தொங்கியபடி சென்ற ரயில்
அந்தப்பக்க வாட்டுச் சுவரை கடந்த போது கொத்து கொத்தாக சுவரில் மோதி சுவருக்கும்
பெட்டிக்கும் இடையில் சிக்கி தண்ட வாளத்தில் விழுந்து உடலுறுப்புகள் சிதைந்து 4 பேர் உயிரிழந்தனர்.
இருவர் தலை துண்டாகி மரணத்தின் வலிகூட உணரும் முன் உயிரிழந்தனர்.
போர்க்களம் போல் காட்சி அளித்த அந்தக் காட்சியை கண்டு பயணிகள் அலறினர். ஆனால் யாரும் அவர்கள் அருகில் செல்ல வில்லை.
4 பேர் உயிரிழந்து கிடக்க, அதில் இருவர் தலைவேறு உடல் வேறாக கிடக்க 6 பேர் உடல் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
அதில் ஒருவர் இரண்டு கால்களும் துண்டாகிக் கிடந்தார். அந்த நேரத்தில் ஒருவர்கூட அவர்கள் பக்கம் செல்ல வில்லை.
அனைவரும் கூச்சலிட்ட படி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த சதீஷ், சலீம் மற்றும் கபீர் என்ற 3 இளைஞர்கள் உடனடியாக களத்தில்
இறங்கி காயமடைந் தவர்களை தூக்கி பிளாட் பாரத்தில் கிடத்தினர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தைரிய மூட்டினர்.
தலை வேறு உடல் வேறாகக் கிடந்தவர் தலையை எடுத்து உடலோடு வைத்தனர். சிதறிக் கிடந்த பொருட்களைச் சேகரித்தனர்.
பலரை அடையாளம் காண அவர்களது நோட்டுப் புத்தகங்கள் தான் உபயோக மாக இருந்தன. அதை சேகரித்து எடுத்து வைத்தனர்.
தாமதமாக வந்த மீட்புப் படையினரும் மெத்தனமாக செயல்பட மூன்று இளைஞர் களும் தங்களை மீட்புப் படையினராகவே மாற்றிக் கொண்டனர்.
கடகட வென்று காயமடைந்த வர்களை தூக்கி ஸ்ட்ரெச்சரில் ஏற்ற உதவி செய்தனர்.
இதில் அவர்கள் உடையெங்கும் காயம் பட்டவர்களின் ரத்தம் படிந்தது. அதைப் பற்றி கவலைப்பட வில்லை.
உதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்புவதில் குறியாக இருந்தனர்.
பின்னர் உயிரிழந் தவர்களின் உடலை வண்டியில் ஏற்ற ஸ்ட்ரெச்சரை தூக்கக்கூட ஆள் இல்லை.
அந்த மூன்று இளைஞர் களும் பிணத்தை தூக்கி வந்து ஸ்ட்ரெச்சரில் கிடத்த அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் நிகழ்வுதான் அங்கு நடந்தது.
தலையையும் அதே இளைஞர் எடுத்து உடலோடு ஒட்ட வைத்தார்.
அதிகாரிக ளிடம் உயிரிழந்த வர்கள், காயம் பட்டவர்களின் பொருட்களை ஒப்படைத்தனர்.
சிலரை அடையாளம் காண அவர்களது நோட்டுப் புத்தகங்களை தேடி எடுத்துக் கொடுத்தனர். இதை அங்குள்ள பலரும் பாராட்டினர்.
மூன்று இளைஞர் களின் இந்தச் செயலை நேரில் பார்த்த செய்தியாளர் பாராட்டி ட்விட்டரில் பதிவிட் டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Thanks for Your Comments