குஜராத் மாநிலம், சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சியில், மும்பையைச் சேர்ந்த, கோடீஸ்வர தொழிலதிபரின்,
டாக்டர் மகள், உலகியல் வாழ்வை துறந்து, சமண மதத்தில் இணைந்து துறவியானார்.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சியில், ஆச்சார்ய விஜய் யஷோ வர்மா சுரேஷ்வர்ஜி மஹராஜிடம்,
மும்பையை சேர்ந்த, டாக்டர் ஹினா ஹிங்கட், 28, என்பவர், தீட்சை பெற்று சமண துறவியானார்.
ஹினாவின் தந்தை, அசோக் குமார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். மும்பையில், நுால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு ஆறு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்தவர், ஹினா ஹிங்கட்; மருத்துவப் படிப்பில், தங்கப் பதக்கம் பெற்றவர்.
பள்ளிப் பருவத்தில் இருந்தே, ஆன்மிகத்தில் விருப்பமுடைய ஹினா, சமண மதத் துறவியாவது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
நீண்ட கால போராட்ட த்துக்குப் பின், மகள் ஹினா, துறவியாவ தற்கு, பெற்றோர் சம்மதித்தனர்.
இதை யடுத்து, சூரத் வந்த ஹினா குடும்பத்தினர், துறவற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
டாக்டர் ஹினா ஹிங்கட், துறவுக்குப் பின், சாத்வி ஸ்ரீ விஷாரத்மாலா என அழைக்கப் படுவார் என, அவரது குடும்பத்தினர் கூறினர்.
Thanks for Your Comments