புதுச்சேரி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், டூ - வீலரில் சென்ற காங்கிரஸ் நிர்வாகியை, பட்டப் பகலில், மர்ம நபர்கள், வெட்டி கொலை செய்தனர்.
பதற்றம் நிலவுவதால், அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
புதுச்சேரி, காலாப்பட்டைச் சேர்ந்தவர் ஜோசப், 42; புதுச்சேரி காங்., வடக்கு மாவட்ட தலைவரான இவர்,
காலாப்பட்டில் உள்ள தொழிற் சாலைகளில், லேபர் கான்ட்ராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வந்தார்.
எதிர்ப்பு :
புதுச்சேரி வருவாய் துறை அமைச்சர், ஷாஜகானுக்கு நெருக்க மானவர். காலாப்பட்டில் உள்ள,
தனியார் மருந்து கம்பெனி விரிவாக்கத் திற்கு, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கம்பெனிக்கு ஆதரவாக ஜோசப் செயல்பட்டார். இதனால், இரு தரப்பிற்கும் இடையே, கடந்த சில மாதத்திற்கு முன் மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது.
இச்சம்பவத்திற்கு பிறகு, ஜோசப் தரப்பிற்கும், எதிர் தரப்பிற்கும் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலை யில், நேற்று மதியம், 12:45 மணிக்கு ஜோசப், காலாப்பட்டில் இருந்து, தன் ஸ்கூட்டரில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆரோவில் கடற்கரைக்கு செல்லும் பாதை அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில், பின் தொடர்ந்து வந்த,
'ஹெல்மெட்' அணிந்த இரண்டு வாலிபர்கள் வழி மறித்து, வீச்சரிவாளால் ஜோசப் கழுத்தில் சரமாரியாக வெட்டி, தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த ஜோசப், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.தகவல் அறிந்து வந்த, கோட்டக்குப்பம் போலீசார்,
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோசப்பை மீட்டு, சிகிச்சைக் காக புதுச்சேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
ஆதரவு :
கோட்டக்குப்பம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை யில், தனியார் மருந்து கம்பெனி விரிவாக்கத் திற்கு,
ஜோசப் ஆதரவு தெரிவித்த தால், ஆத்திர மடைந்த எதிர் தரப்பினர், கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜோசப் உடல், புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டு இருந்தது.
மருத்துவ மனைக்கு வந்த, முதல்வர் நாராயண சாமி, ஜோசப் உடலை பார்த்தார்.
சட்ட சபைக்கு வந்த ஜோசப் உறவினர்கள், முதல்வர் நாராயண சாமியை சந்தித்து, கொலை யாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.
காலாப்பட்டில் பதற்றம் : ஜோசப் கொலையால், காலாப்பட்டு பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
துப்பாக்கி ஏந்திய ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.சர்ச்சைக் குரிய மருந்து கம்பெனி எதிரிலும், ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
பெண் ஊழியர் களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஜோசப் கொலை தொடர்பாக,
கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கொலை யாளிகளை தேடி வருகின்றனர்.
Thanks for Your Comments