வைர வியாபாரி நீரவ் மோடியின் அமெரிக்க சொத்துகள் விற்கப் பட்டால், அதன் மூலம் கிடைக்கும்
வருவாய் மீது உரிமை கோர பஞ்சாப் நேசனல் வங்கிக்கு உரிமை இருப்பதாக அமெரிக்க கோர்ட் உத்தர விட்டுள்ளது.
கார்ப்பரேட் விவகாரங் களுக்கான மத்திய அமைச்சகம், நியூயார்க்கில் திவால் வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி மனு தாக்கல் செய்தது.
அமெரிக்காவில் உள்ள நீரவ் மோடியின் சொத்துகள் விற்கப் பட்டால், அதில் பஞ்சாப் நேசனல் வங்கிக்கும் உரிமை கோரி இந்த மனு தாக்கல் செய்யப் பட்டது.
நியூயார்க் கோர்ட் இதன் மீது இரு முக்கிய உத்தரவு களை பிறப்பித்துள்ளது.
நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் மிஹிர் பன்சாலி , ராக்கி பன்சாலி, அஜய் காந்தி,
குணால் பட்டேல் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தர விட்டுள்ளது.
இதன்படி நீரவ் மோடி கோர்ட்டில் ஆஜராகா விட்டால் அமெரிக்க சட்டத்தின்படி நடவடிக்கை களை எதிர் கொள்ள நேரிடும்.
நீரவ்மோடி ஆஜரானால் அவரது இருப்பிடம் தெரிய வருவதுடன், அவரை இந்தியா விற்கு கொண்டு வருவதற் கான நடவடிக்கைகள் விரைவு படுத்தப்படும் என தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments