ஆண் தொந்தரவு செய்வதாக திருநங்கை எஸ்.ஐ புகார் !

0
பேஸ்புக் மூலம் பழகி நட்புடன் இருந்த ஆண் நண்பர் தற்போது தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக முதல் திருநங்கை எஸ்ஐயான பிரித்திகா யாஷினி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
ஆண் தொந்தரவு செய்வதாக திருநங்கை எஸ்.ஐ புகார் !
இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற சிறப்பைப் பெற்றவர் திருநங்கையான பிரித்திகா யாஷினி. இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் கடலூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்ற இளைஞரு க்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட் டுள்ளது. தொடர்ந்து நட்புடன் இருந்து வந்ததாகக் கூறப் படுகிறது. 

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரித்திகா யாஷினி, அவரைப் பிரிந்துள்ளார். 
இருப்பினும் ஜனார்த்தனன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக பிரித்திகா யாஷினி, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித் துள்ளார். 

இதைத் தொடர்ந்து, சம்பந்தப் பட்ட இளைஞரை அழைத்து போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ள தாகக் கூறப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings