விரல்களைக் காட்டி செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிடுவது ஆபத்தானது. சைபர் கிரைம் குற்றவாளிகள் அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரித் துள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகை களை அம்பலப்ப டுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இந்நிலையில் செல்பி புகைப் படங்கள் குறித்து ரூபா பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரூபா கூறியிருப்பதாவது:
கை விரல்களைப் பலவிதமாக காட்டியவாறு எடுக்கும் செல்பி படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியிடு கின்றனர்.
இது மிகவும் ஆபத்தானது. இந்த புகைப் படங்களைக் கொண்டு கைரேகையை திருடும் வேலையில் சைபர் கிரைம் ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளனர்.
செல்பி படத்தில் உள்ள கை விரல்களை பெரிதாக்கி ஸ்கேன் செய்து, கை ரேகையை எடுக்கிறார்கள்.
இதைக் கொண்டு பெரிய அளவில் மோசடிகளை செய்கிறார்கள். எனவே தயவு செய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம். இவ்வாறு ரூபா கூறியுள்ளார்.
Thanks for Your Comments