மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் கட்டுமான தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்,
அவரது சகோதரர்கள் இக்பால் கஸ்கர், அனீஸ் இப்ராஹிம் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
தாணேவைச் சேர்ந்த தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இக்பால் கஸ்கர் மற்றும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கோராய் என்ற பகுதியில் 38 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கிய போது, அது தொடர்பான பேரத்தில் தலையிட்டு தம்மை மிரட்டி ரூ.3 கோடி பணத்தை பறித்துக் கொண்டதாக கஸ்கர் உள்ளிட்டோர் மீது அந்த தொழிலதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, பணம் பறித்த விவகாரத்தில் கஸ்கர் மட்டுமின்றி,
பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராஹிம் மற்றும் அனீஸ் இப்ராஹிம் ஆகியோரு க்கு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோர் மீது தாணே மாவட்ட நீதி மன்றத்தில் காவல் துறையினர் கடந்த வியாழக்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சுமார் 1,000 பக்கங்களைக் கொண்ட அந்த குற்றப் பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங் களையும், சாட்சி களையும் இணைத் துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Thanks for Your Comments