சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப் பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல் களால் போலீசார் அதிர்ச்சியடைந் துள்ளனர்.
இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளி யான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டர் வேலை பார்த்தவர் ஆவார்.
இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவ மனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே லிப்ட் ஆப்ரேட்டர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற் காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து களையும் அதன் விவரங் களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார்,
அந்த மருந்து களையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்திய தாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments