மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவி !

0
கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த கல்லூரி மாணவி !
அங்கு உரிய முறையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட வில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மேலும் மேலிருந்து குதிக்க தயக்கம் காட்டிய மாணவியை வற்புறுத்தி குதிக்க வைத்தாகவும் புகார் கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் நல்லா கவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி ( வயது 19). இவர் வாளையார் சாலையில் நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை

மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பிபிஏ பயின்று வந்தார். இந்நிலையில் அந்தக் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடந்துள்ளது.

பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நேற்று மாணவி களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது.
கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வு களின் போது, கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து விளக்கப் பட்டது.

2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றவும் மாதிரி பயிற்சி செய்து காண்பிக்கப் பட்டது.

இந்த மாதிரி பயிற்சியை பலர் பார்த்துக் கொண்டு இருந்தனர். 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே ஒவ்வொருவராக குதித்தனர். கீழே விரிக்கப்பட்ட வலையில் அவர்கள் ஒவ்வொருவராக குதித்தனர்.
அப்போது மாணவி லோகேஸ்வரியும் கீழே குதிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டார். அவர் குதிக்க வேண்டிய சுற்று வந்த போது அவருக்கு திடீரென தயக்கம் ஏற்பட்டது. 

கீழே குதிப்பதற்கு பயமாக இருப்பதாக கூறினார். அப்போது அங்கு இருந்த பயிற்சியாளர் தைரியத்துடன் குதிக்கும் படி கூறியுள்ளார். மாணவியின் கையைப் பிடித்து இழுத்து கீழே குதிக்குமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கீழே குதித்த மாணவி லோகேஸ்வரி யின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் பயங்கரமாக இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது.

இந்த பயற்சியை கீழே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த மாணவிகள் அலறி யடித்தனர். காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதை யடுத்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பயிற்சியாளர் எனக் கூறியுள்ளார். 

இது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி நடந்தது குறித்து தங்களுக்கு முன் கூட்டியே தகவல் அளிக்க வில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
இது போலவே தீயணைப்புத் துறையினரும் தங்களுக்கு தகவல் அளிக்கப்பட வில்லை எனக் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விவரங்கள் கேட்க கல்லூரி முதல்வர் என். மாலாவை தொலை பேசியில் தி இந்து (ஆங்கிலம்) சார்பில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்க வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings