ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை யடிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது செய்யப் பட்டார். சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த மையத்தில் உள்ள ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை யடிக்க இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து வங்கி கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலாரம் ஒலித்துள்ளது. உடனடியாக இது குறித்து வங்கி அதிகாரிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் அண்ணாசாலை போலீஸாருக்கு தெரிவிக்கப் பட்டது. போலீஸார் அங்கு விரைந்து சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
இதில், பிடிபட்டவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் சுலைமான் பாஷா (19) என்பதும் இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்ததும் தெரிய வந்தது.
இவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதி காரிகள் கூறும்போது, பிடிபட்டுள்ள ஷேக் சுலைமான் பாஷா,
தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை யடிக்க முயற்சி செய்துள்ளார்.
அது முடியாததால் ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் போது பிடிபட்டுள் ளார்” என்றனர்.
Thanks for Your Comments