மத்தியப் பிரதேச மாநிலம், மண்ட்சௌரில் பள்ளிக்கு வெளியே பெற்றோர் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று 8 வயது சிறுமி காத்திருந்தார்.
அந்த சிறுமியை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அத்துடன், சிறுமியின் கழுத்தை அறுத்து சாலையோரம் வீசி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
அப்பகுதி வழியே சென்றவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் புதன்கிழமை இரவு சந்தேகிக்கப் படும் முதல் நபரை கைது செய்தனர். அதன் பிறகு சந்தேகிக்கப்படும் 2-ஆவது நபரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சனிக்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப் பட்டது. இந்நிலையில், மத்தியப் பிரேதசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ்,
பாதிக்கப்பட்ட சிறுமியுடைய தந்தையின் வங்கிக் கணக்கில் முதல்வர் 5 லட்சம் ரூபாய் செலுத்தி யுள்ளார். போலீஸார் குற்றவாளி களை விரைவில் கண்டு பிடிப்பார்கள். அதை யடுத்து அவர்கள் தூக்கிலிடப் படுவார்கள்.
அந்த சிறுமியின் உடல் நலம் மற்றும் கல்வியின் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளும்" என்று சனிக்கிழமை தெரிவித்தார்.
இதற்கு அந்த சிறுமியின் தந்தை, எனக்கு நஷ்டஈடு வேண்டாம், குற்றவாளி களை தூக்கிலிட வேண்டும் என்றார்.
அந்த சிறுமி தற்போது உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ள தாக போலீஸார் தெரிவித்தனர்.
Thanks for Your Comments