படத்தில் வருவது போல இணையதள மோசடியில் ஈடுபட்டு, அசாம் மாநில காவல்துறை தலைவர் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் பெயர்களில் போலி பேஸ்புக் கணக்குகள் வைத்திருந்தவர் நேற்று கைது செய்யப் பட்டார்.
கடந்த மாதம் அசாம் காவல்துறைத் தலைவர் குலந்தர் சாய்க்கா மற்றும் நாத் ஆகியோர் பெயரில் போலி பேஸ்புக் கணக்குகள் இருப்பது கண்டறியப் பட்டது.
இதுபோல பல போலீஸ் அதிகாரிகளுக்கும் போலி கணக்குகளின் பின்னால் வேறு யாரோ செயல் படுகிறார்கள் என்று புகார்கள் வந்தன. இது போலீஸாரை விசாரணை செய்யத் தூண்டியது.
செல்போன் எண்களை ஹேக் செய்து பலரின் வாழ்க்கையில் விளையாடுவது போல இரும்புத் திரை திரைப் படத்தின் காட்சிகள் அமைந்திருக்கும்.
அதே போன்று தன் வீட்டில் பெரிய ஏராளமான செல்போன்களை வைத்துக் கொண்டு மற்றவர்களின் பெயரில் பேஸ்புக் கணக்கையே உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் தவறான தகவல் பரிமாற்றங்களில் ஈடுபட்டு வந்தவர் சுலைமான் இப்ராஹிம் அலி (30).
இவர் கவுகாத்தி நகரில் நீண்டநாட்களாக சைபர் கிரைம், குற்றப்பிரிவு காவல் துறைகளுக்கு சவாலாக இருந்து வந்தார்.
இவரை எப்படியாவது கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என போலீஸார் தொடர்ந்து ரகசிமாக முயற்சி செய்து வந்தனர்.
ஒரு திருப்பு முனையாக சுலைமான் இப்ராஹிம் அலி தான் போலீஸ் உயரதிகா ரிகளின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி இயங்கி வருகிறார் என்ற உண்மையை நேற்று கண்டு பிடித்தனர்.
உடனடியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்து நேற்று இரவு இப்ராஹிம் அலி கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு அவர் மூத்த காவல்துறை அதிகாரிகளின் பெயர்களில் உள்ள தனது 17 போலி பேஸ் புக் கணக்கு களையும் ஒவ்வொன்றாக திறந்து காட்ட ஒப்புக் கொண்டார்.
ஒரு வேளை இதற்குப்பின் மிகப்பெரிய அளவிலான சதித்திட்டம் இருந்தால் அவை முறியடிக்கப்பட வேண்டும்.
ஒரு வேளை தவறான நோக்கத்தோடு அதிக எண்ணிக்கையிலான மொபைல் தொலைபேசிகள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்கி வந்தால்
அவற்றை மீட்டெடுப்பது காவல் துறையின் தீவிரமான பணியாகும். இவ்வாறு அசாம் காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
போலி பேஸ்புக் கணக்குகள் உடனே முடக்கப் பட்டன. இவர் எதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Thanks for Your Comments