மாணவியின் உயிரைக் குடித்த போலி பயிற்சியாளர் !

0
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் குறித்து பல திடுக் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
மாணவியின் உயிரைக் குடித்த போலி பயிற்சியாளர் !
பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடம் மேலாண்மை வாரியம் டெல்லியில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித் துள்ளது. ஆறுமுகம் என்பவர் இத்தகைய பயிற்சியை கொடுக்க நாங்கள் நியமிக்க வில்லை. 

மேலும் போதிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இத்தகைய பயிற்சிகளை அளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் ஊக்குவிப்ப தில்லை" என்றும் வாரியம் தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் போலி அடையாளம்..
ஆறுமுகம் போலி அடையாள அட்டை மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இது போன்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்தது தெரிய வந்துள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆறுமுகம் கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்.

அவரது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் ஐடியில் தனது பெயருடன் NDMA என்பதையும் சேர்த்துள்ளார். மேலும், Trainer at National Disaster Management Authority, India என்றும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் எடுத்த புகைப் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் தன்னை பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு முதலுதவி பயிற்றுநர் என்றே அறிமுகப் படுத்தி யிருக்கிறார். 

பயிற்சி அளிப்பதற்கு என்று அவர் எவ்வித கட்டண த்தையும் பெறவில்லை. ஆனால் பயிற்சிக்கான சான்றிதழ் பெற மாணவர்கள் ரூ.50 தருமாறு கோரியுள்ளார்.

பிழைகளுடன் இருந்த கடிதம்..
பேரிட மேலாண்மை பயிற்சி அளிக்க ஆறுமுகம் எழுதிய கடிதத்தில் அவ்வளவு இலக்கணப் பிழை இருந்தது தெரிய வந்துள்ளது. மே 15 2017 தேதியிட்ட அந்த இமெயில் கல்லூரிக்கு நவமர் 11 2017-ல் அனுப்பப் பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்குமாறு மத்திய அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள தாக குறிப்பிட்டி ருந்தார். 

ஆனால், இது குறித்து கல்லூரி நிர்வாகம் அது சார்ந்த பாரதியார் பல்கலைக் கழகத்தில் விசாரிக்கத் தவறி விட்டது. ஆறுமுகத்தைப் பற்றியும் கல்லூரி நிர்வாகம் எதுவும் விசாரிக்க வில்லை. 

மேலும், அரசாங்கம் அனுப்பும் இமெயில்கள் எல்லாம் .nic.in என்ற் டொமைனில் இருந்து தான் வரும். ஆனால், ஆறுமுகம் ஜிமெயிலில் இருந்து கடிதம் அனுப்பி யிருக்கிறார். அதையும் கல்லூரி நிர்வாகம் கவனிக்க வில்லை. 
ஆறுமுகத்தின் கடிதத்தின் அடிப்படையில் மட்டுமே அவரை பயிற்சியளிக்க அனுமதித்தை கல்லூரி முதல்வர் மாலா ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி ஆறுமுகம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை தியரி செசன் எடுத்திருக்கிறார். பின்னர் மதியம் செய்முறை பயிற்சி அளித்திருக்கிறார். 

இதில் கலந்து கொள்ள 220 பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்தனர். அதிலும், கயிறு ஏறும் பயிற்சிக்கு வெறும் 20 பேர் மட்டுமே இசைவு தெரிவித்திருக் கின்றனர்.

முதலில் இரண்டு மாணவிகள் இறங்கிய பின்னர் மூன்றாவ தாக லோகேஸ்வரி இறங்க வேண்டியிருந்தது. லோகேஸ்வரி தயக்கம் காட்டியிரு க்கிறார். 

கீழே மாணவர்கள் வலையைப் பிடித்துக் கொண்டிருந் ததால் மாணவியை ஆறுமுகம் தள்ளிவிட்டிருக்கிறார். லோகேஸ்வரி யின் தலை சாளரத்தில் பலமாக மோதியிருக்கிறது. 
கீழே விழுந்த மாணவி எழுந்து நின்று தனது தோழிகளிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். கைகளைப் பிடித்துக் கொள்ளுமாறும் சொல்லி யிருக்கிறார். 

அதன் பின்னர் மயங்கிய அவர் விழிக்கவே இல்லை. கோவை அரசு மருத்துவ மனையில் அவர் உயிர் பிரிந்தது. முறையாக பயிற்சி பெறாத ஒருவரை சரியாக விசாரித்து வாய்ப்பு வழங்காததால் மாணவியின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings