உத்தரப் பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பரி கிராமத்தில், இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டிடம், திடீரென இடிந்து, அதன் அருகாமை யில் இருந்த 4 குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்தது.
இந்த பயங்கர விபத்தில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங் களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி யிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கட்டிட இடிபாடு களுக்குள் சிக்கி யிருபவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் கூடினர்.
இதனால், பொது மக்களை கட்டுப் படுத்துவதற் காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.
தற்போது வரை, இரண்டு பேரது உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. இந்த விபத்தில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப் படுகிறது.
Thanks for Your Comments