பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரில் போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் இளைஞர் ஒருவர் தன்னுடைய செல்போனில் அதனை படமாக பிடித்து இணைய தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, வீடியோவும் இணையத்தில் வைரலானது.
பின்னர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் சம்மந்தப் பட்ட பெண்ணிடம் இருந்து போலீஸ்காரரை மீட்டு, சிகிச்சைக் காக குரு கோபிந்த் சிங் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி முக்தர் சிங் கூறியதாவது:-
சதார் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் இக்பால் சிங் இவர் சம்மந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று,
அவரிடம் அத்து மீற முயன்றதாலே மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக பெண் தரப்பை சார்ந்தவர்கள் கூறி யுள்ளனர்.
அதே சமயம் இது குறித்து இக்பால் சிங் தரப்பில் உள்ளூர் கடையி லிருந்து சம்மந்தப்பட்ட பெண் வாசிங்மெஷின் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி யதாகவும்,
அதை பற்றி விசாரிக்க வீட்டிற்கு வந்த பொழுது பணத்தை கொடுக்க மறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இக்பால் கூறியதாக அவர் தெரிவித் துள்ளார்.
மேலும், இருவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை மேற் கொள்ளப்பட்டு, குற்றம் செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments