'நான் இன்ஸ்பெக்டர் உங்களை உள்ளே தள்ளி விடுவேன்'' என்று இளம் பெண்ணுடன் தனியாக
காரில் அமர்ந்திருந்த இளைஞரை மிரட்டிய போலி இன்ஸ்பெக்டரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்
ஆவடி ஈஸ்வரன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் மோசஸ் (23). இவர் தனது பெண் நண்பருடன்
அண்ணா சாலை மின்சார தலைமை அலுவலகம் பின்புறம் பின்னி லிங்க் சாலையில் தனது காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், 'தம்பி யார் நீ, இங்கே இளம் பெண்ணுடன் அமர்ந்து என்ன செய்துக் கொண்டிருக் கிறாய்?' என்று கேட்டு மிரட்டி யுள்ளார்.
'நீங்கள் யார் சார் அதைக்கேட்க' என்று அந்த இளைஞர் கேட்க, 'ஒரு அதிகாரியையே கேள்வி கேட்கிறாயா?
நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மேன், உன் லைசென்ஸ், காரின் ஆர்சி புக் அனைத்தை யும் எடு, உன்னை விசாரிக்க வேண்டும்' என்று
அதிகாரத் தோரணை யுடன் அந்த நபர் பேசியுள்ளார். இதைக் கேட்டு பயந்து போன அந்த இளைஞர், 'சார் இவங்க என் தோழி, கார் அவங்க கார்,
வெகு நாள் கழித்து அவரை இங்கு பார்த்தேன், பேசிக் கொண்டிருக் கிறேன்' என்று கூறி யுள்ளார்.
'உன்னைப் பார்த்தால் எனக்கு சந்தேகமாக இருக்கிறது, பைக்கில் ஏறு என்னுடன் ஸ்டேஷனுக்கு வா' என்று
காரிலிருந்து மோசஸை இறக்கி தன்னுடன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காரில் இருந்த இளம் பெண்ணை காரை எடுத்துக்கொண்டு போகச் சொல்லி இருக்கிறார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் தோற்றம், தோரணை இன்ஸ்பெக்டர் போன்று இல்லையே என்று
சந்தேகப்பட்ட பெண் உடனடியாக காவல் கட்டுப் பாட்டறைக்கு போன் செய்து தன்னுடன் வந்த நண்பரை இன்ஸ்பெக்டர் என்று
கூறி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்கிறார் சந்தேகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
உடனடியாக புகார் எழும்பூர் காவல் நிலையத்துக்கு அளிக்கப்பட்டு எழும்பூர் ஆய்வாளர் சேட்டு தலைமையில் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
இதற்கிடையே மோசஸை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்ற
அந்த நபர் எத்திராஜ் கல்லூரி அருகே பேருந்து நிலையத்தில் நிறுத்தி இறக்கி விட்டு,
'உன்னை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றால் ரிமாண்ட் செய்து விடுவேன்,
உன் பெற்றோரை அழைத்து காரில் பெண்ணுடன் இருந்தது குறித்து பெற்றோருக்கும் தெரிந்து விடும்' என்று மிரட்டியுள்ளார்.
'நான் ஒரு தவறும் செய்ய வில்லையே' என்று மோசஸ் கூற. 'அது எனக்குத் தெரியும் சட்டத்துக்கு தெரியாதே,
உன்னை இப்படியே விட்டு விடுகிறேன் எனக்கு 1000 ரூபாய் கொடு ' என்று கேட்டுள்ளார்.
இதற்கிடையே எழும்பூர் காவல் ஆய்வாளர் மோசஸின் செல்போனில் அவரை அழைத்துள்ளார்.
'உன்னுடன் இருக்கும் ஆய்வாளர் யார், எந்த ஸ்டேஷன் என்று கேள், அவரிடம் போனைக் கொடு' என்று கூறியுள்ளார்.
போனை வாங்கிய அந்த நபர், 'நான் டிராபிக் ஆய்வாளர்' என்று மழுப்பி யுள்ளார்.
'எங்கே நிற்கிறீர்கள், அங்கேயே நில்லுங்கள் வந்து விடுகிறேன்' என்று ஆய்வாளர் கூற,
பயந்து போன அந்த நபர், 'தம்பி நீ கிளம்பு' என்று மோசஸை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்துள்ளார்.
மோசஸ் அவரது மோட்டார் சைக்கிள் எண்ணை குறித்து வைத்துக் கொண்டு எழும்பூர் போலீஸாரிடம் கூற
ஆயிரம் விளக்கு நோக்கிச் சென்ற அவரை மடக்கிப் பிடிக்க ஆயிரம் விளக்கு போலீஸாரிடம்
எழும்பூர் போலீஸார் கேட்டுக் கொள்ள கிரீம்ஸ் சாலையில் அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் எழும்பூர் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் நிஜாம் (33) என்பதும்,
ராயபுரம் பிவி கோயில் தெருவில் வசிப்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
உயரமாக ஆஜானு பாகுவாக இருந்ததால் போலீஸ் என நண்பர்கள் வட்டாரத்தில் புகழ நாம் ஏன் போலீஸ் போல் வேஷம் போட்டு
மிரட்டி பணம் பறிக்கக் கூடாது என்று தோன்றிய தால் இப்படி இறங்கியதாக நிஜாம் தெரிவித்தார்.
அவர் வேறு யாரையும் ஏமாற்றி யுள்ளாரா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments