சண்டிகரில் ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் குழந்தை உயிரிழப்பு !

0
அரசு ஆம்புலன்ஸ் கிடைத்தது; மருத்துவ மனைக்கும் செல்ல முடிந்தது, ஆனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கதவுகளைத் திறக்க முடியாததால் குழந்தை உயிர் பிரிந்த சம்பவம் சண்டிகர் மாநிலத்தில் நடந்துள்ளது.
சண்டிகரில் ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் குழந்தை உயிரிழப்பு !
குழந்தை உயிரிழந்த சம்பவத்தின் விவரம் வருமாறு:

ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை குழந்தை இதய அறுவை சிகிச்சைக்கு புகழ் பெற்றது. 

இம்மருத்துவ மனையில் சிகிச்சை செய்வதற்காக குழந்தையின் தந்தை ரயிலில் பிஹாரின் கயாவி லிருந்து வந்தார்.

ஆனால், இக்குழந்தையின் நிலை மிகவும் மோசமாக மாறியதால், ராய்ப்பூர் ரயில் நிலையத் திற்கு அருகிலுள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மெமோரியல் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப் பட்டது.

இதற்காக சஞ்சீவினி எக்ஸ்பிரஸ் 108 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டார். உடனே குழந்தை டாக்டர் அம்பேத்கர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டது.

இது குறித்து குழந்தையின் தந்தை தெரிவித்ததாவது:
எவ்வாறா யினும், மருத்துவ மனைக்குச் சென்ற பிறகும் பயன் கிடைக்க வில்லை. காரணம் அங்கே சென்றதும் குழந்தையை வாகனத்தி லிருந்து எடுக்க முடிய வில்லை. 

ஆம்புலன்ஸ் பின்பக்க கதவுகள் ஏனோ இறுக்கிக் கொண்டன. எவ்வளவு முயன்றும் கதவுகளைத் திறக்க இயல வில்லை. 

இது 40 நிமிடங் களுக்குத் தொடர்ந்தது. ஆனால் அதற்குள் குழந்தையின் நிலை எல்லையைக் கடந்து விட்டது என்பதை நாங்கள் அறிய இயல வில்லை.

வாகனத்தின் ஜன்னல் கதவுகளையும் தான் திறக்க முயன்றேன். ஆம்புலன்ஸ் ஊழியர் 'இது அரசு சொத்து அந்த மாதிரி செய்யக் கூடாது' என்று என்னை எச்சரிக்கை செய்தார்.
மருத்துவ மனை ஊழியரின் உதவியோடு ஆம்புலன்ஸின் ஜன்னல் கதவுகள் திறக்கப் பட்டன. 

பின்னர் அவ்வழியாக குழந்தை வெளியேற்றப் பட்டு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாகக் கூறினர்''. 

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தந்தை தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வழங்கும் அதிகாரியின் மீது வழக்குப் பதிவு

இது குறித்து மாவட்டத் தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார அலுவலர் டாக்டர் கே.எஸ்.சாண்டில்யா போலீஸில் புகார் அளித்தார். 

அவரது போலீஸ் புகாரில், சாண்டில்யா, ஆம்புலன்ஸ் வாகனப் பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக ஆம்புலன்ஸ் இயக்குதல் பிரிவை கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

இப்புகாரின் அடிப்படையில் மவுத்தாபாரா போலீஸாரால், ஜிவிகே எமர்ஜென்ஸி மேனேஜ்மெண்ட் அன்ட் இன்ஸ்டிடியூட்டின் 
ஆம்புலன்ஸ் பிரிவு தலைமை இயக்குதல் அதிகாரி விக்ரம் சிங்மீது நேற்று இரவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்திய தண்டனைச் சட்டம் 336ன் (உயிருக்கு ஆபத்து அல்லது மற்றவர் களின் தனிப்பட்ட பாதுகாப்பு) கீழ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் பணியே அவசர சேவையின் கீழ் வருகிறது. அப்படி யிருக்க அப்பணியில் நடக்கும் எந்த அலட்சியத் தையும் பொறுத்துக் கொள்ள முடியாது என மாவட்டத் தலைமை மருத்துவர் சாண்டில்யா தெரிவித்தார்.

சண்டிகர் மாநில அரசின், ஜி.வி.கே.எம்.எமர்ஜென்ஸி மேனேஜ்மெண்ட் அன்ட் இன்ஸ்டிடியூட், 2011-ம் ஆண்டி லிருந்து 'சஞ்சீவனி எக்ஸ்பிரஸ் 108 ஆம்புலன்ஸ்' சேவையை இயக்கி வருகிறது.

யாரும் கைது செய்யப்பட வில்லை
இது குறித்து கோட்வாலி பகுதியின் காவல் கண்காணிப்பாளர் சுக்நந்தன் ரத்தோர் பிடிஐயிடம் தெரிவிக்கையில், 

ஐபிசி பிரிவு 336 (மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து அல்லது மற்றவர் களின் தனிப்பட்ட பாதுகாப்பு) கீழ் சிங் பதிவு செய்யப் பட்டார். 

ஆனால் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.

உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு வந்தும், ஆம்புலன்ஸ் கதவுகள் மக்கர் செய்ததால் அவசர சிகிச்சை செய்ய முடியாத நிலையில் குழந்தை இறந்த சம்பவம் சண்டிகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings