அரசு சாரா தன்னார்வ அமைப்பு ஒன்றும் , அனைத்து இந்திய ஜனநாயக மகளிர் சங்கமும் திருமண பாலியல் வன்புணர்வு ஒரு குற்றம் என
அறிவிக்கக்கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை மறுத்து ஆண்கள் நல அறக்கட்டளை என்ற அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும்
நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,
திருமணம் போன்ற உறவின் போது பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருதரப்புக்குமே
உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருமணம் என்பது பெண்கள் எப்போதும் உடலுறவுக் தயாராகவும், விருப்பத் துடனும், இணக்கத் துடனும் இருப்பதாக அர்த்தம் ஆகாது,
சம்பந்தப்பட்ட பெண் அதற்கு தயாராக இருப்பதாக ஆண் நிரூபிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், உடல் ரீதியாக வற்புறுத்துவது மட்டுமே பாலியல் வன்புணர்வு ஆகி விடாது, உடலில் உள்ள காயங்கள் குறித்து ஆராய தேவை யில்லை,
கணவன் தனது மனைவி யின் குடும்பத் தேவை களுக்கான பணத்தை உடலுறவு கொண்டால்
மட்டுமே தருவேன் என்று மன ரீதியாக துன்புறுத் துவதும் பாலியல் வன்புணர் வாகவே கருத வேண்டும்,
இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன் புணர்வுக்கு அர்த்தம் முற்றிலும் மாறி விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
எனினும் இது தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்பட வில்லை என்பதால் வழக்கை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Thanks for Your Comments