ஒரு நாள் திடீர் என கோடீசுவரராக மாறிய பெண்மணி !

0
நீங்கள் ஒரு நாள் திடீர் என கோடீசுவரராக மாறினால் என்ன செய்வீர்கள்? சொந்தமாக ஒரு வீடு வாங்வீர்கள் 
ஒரு நாள் திடீர் என கோடீசுவரராக மாறிய பெண்மணி !
ஒரு சொகுசு கார் வாங்குவீர்கள் ஒரு ஆடம்பரமான கப்பலில் விடுமுறையை களிப்பீர்கள்.

பாஸ்டன் நகரில் எலென் பிளி்மிங் என்ற பெண் தற்காலிகமாக திடீர் என கோடீசுவரராகி உள்ளார். 

ஆனால் அவருக்கு சந்தோஷம் இல்லை. அவரது வங்கி கணக்கில் திடீர் என கோடிகணக்கான பணம் போடபட்டு உள்ளது. 
அவர் கணக்கில் தவறுதலாக மில்லியன் டாலர்கள் போடப்பட்டது குறித்து வங்கி நிர்வாகம் கொஞ்சம் காத்திருங்கள் என கூறி உள்ளது.

எலன் பிளமிங் புதன் கிழமையன்று டிடி அம்ரிடிரேடு (TD Ameritrade) என்ற நிதிய ஆலோசகரிடம் இருந்து வாய்ஸ் மெயிலை பெற்றுள்ளார். 

பின்னர் சிறிது நேரத்தில் அவரது கணக்கில் கோடிக் கணக்கான பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
அந்த பெண் தனது நிறுவனத்தின் ஆப் மூலம் தனது வங்கி கணக்கை பார்க்கும் போது கணக்கில் 50 டாலர் இருந்த 
வங்கி கணக்கில் 1.1 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பி ரூ.7.5 கோடி) டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

பிளமிங் தி பாஸ்டன் க்ளோப்ஸிடம், உடனடியாக தனது வேலையை விட்டு விட்டு, மாணவர் கடன்களை செலுத்துவ தாகக் கருதினார்.

மீண்டும் நிதி ஆலோசகரை அழைத்தார், அவரிடம் தனது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட விவரத்தை கூறி உள்ளார். 
பிளமிங் இந்த பணம் புளோரிடாவில் வசிக்கும் தன்னைடைய பெயர் உடைய வேறு ஒரு பெண்மணிக்கு சொந்தமானது என்று கூறுகிறார்.

அவளுடைய குறிப்பில் அவள் ஒரு "சில மணி நேர கோடிசுவரர்” என்று குறிப்பிட்டு சிரிக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings