மதுரை அரசு அலுவலகங்களில் இன்று முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள் களுக்கு தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப் படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதை நடைமுறைப் படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி, அனைத்துத் துறைகளுடன் இணைந்து பல்வேறு நடவடி க்கைகளை மேற்கொள் வதற்கான செயல்திட்டம் தயாரித்தது.
இதன் முதல் நடவடிக்கை யாக ஜூலை 2 ஆம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களிலும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தம்பளர், பிளாஸ்டிக் விரிப்புகள்
ஆகிய வற்றுக்குத் தடை விதிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்தார். மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரி களில் இது முழுமை யாக அமல் படுத்தப்படும்.
அதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என படிப்படியாக பிளாஸ்டிக் தடை விரிவு படுத்தப்படும். அதை உற்பத்தி செய்யும் இடங்க ளிலேயே தடுப்பதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்படும்.
மக்காத பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளன.
அதேபோல, காய்கறி விற்பனை செய்வோர், இறைச்சிக் கடைகள், உணவகங் களில் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற வற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படும்.
ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி யாளர்களுக்கு, அவற்றுக்கு மாற்றான பொருள்கள் தயாரிப்புக்குத் தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும்.
இது போன்ற தொடர் நடவடிக்கைகள் மூலமாக தமிழக முதல்வர் அறிவிப்பின் படி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும் என்றார்.
Thanks for Your Comments