காவல் துறையினருக்கு வார விடுப்பு என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது, காவல் துறையினர் வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் செலவழிக்க
அரசு அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன் வார விடுமுறை குறித்து அரசின் விளக்கத்தை அளிக்க உத்தர விட்டுள்ளார்.
காவல் துறையினரின் நலன், பணி குறைப்பு, ஆர்டர்லிகள் தொடர்பான வழக்குகள் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கடந்த முறை நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்த போது காவல் துறையினரு க்கு வாரம் ஒரு நாள் ஏன் விடுப்பு வழங்கக் கூடாது
என்று கேள்வி எழுப்பி அதற்கு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தர விட்டிருந்தார்.
இன்று விசாரணை யின் போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
அவர் போலீஸ் நடைமுறை உத்தரவில் உள்ள விதிமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் காவல் துறையினர் ஒவ்வொரு வருக்கும் வார விடுப்பு வழங்கப் படுவதாக உள்ளதாக வும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
மேலும் வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் பணி நேர ஊதியம் என்ற அடிப்படை யில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன் ஒவ்வொரு வாரமும் 200 ரூபாய் தருகிறார்கள் என்றால் யாரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள், பணிக்கு வரத்தான் செய்வார்கள்.
அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுக்கும் நிலையில் காவலர் களுக்கு
ஏன் ஒரு நாள் சுழற்சி முறையில் வார விடுப்பு அளிக்கக் கூடாது? அது குறித்து விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
காவல் பணியில் ஈடுபடும் காவலர்களை வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும்.
காவல் துறையின் பணி என்பது மிகவும் அவசியமானது. காவல் துறையினர் இல்லை யென்றால் தடி எடுத்தவ னெல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை உருவாகி விடும்.
அதேபோல் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மூல காரணமே மதுபானம் அருந்துவது தான்.
காவல் துறை மீதும், அரசு மீதும் தான் மக்கள் நம்பிக்கை வைத்திருக் கின்றனர், அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
கடந்தாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற காவல் துறையினரின் குழந்தைகள் பெரும் பாலானோர் போக்குவரத்து காவலர் களின் வாரிசுகளாக இருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம் சட்டம் ஒழுங்கு காவல் துறை மற்றும் குற்றப்பிரிவு காவல் துறையினர் வீட்டிற்கு செல்வது சிரமமாக இருந்ததும் ஒரு காரணம்.
மாறாக, போக்குவரத்து காவல் துறையினர் குடும்பத்திடம் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பிருந்தது.
அதனால் அவர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். காவல் துறையினரு க்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பது ஆவணங்களில் மட்டுமே உள்ளது.
அதை நடை முறைக்குக் கொண்டு வரும் வகையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.
இதுதவிர காவல் துறையின் நலஆணையம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல் படுத்துவது, எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விளக்க மளிக்க வேண்டும்.
விடுப்பு நேரத்தில் பணிக்கு வரும் காவலர் களுக்கு ரூ.200 வழங்கப்படும் என்ற விதியை மாதத்தில் ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று மாற்ற முடியுமா?
என்பதையும் அரசிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்'' என்று உத்தர விட்டார். இந்த வழக்கு ஜுலை 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
Thanks for Your Comments