செல்ஃபி மோகத்தால் உயிரை இழக்கும் செய்திகள் ஒரு புறமிருக்க இங்கே செல்ஃபி மோகத்தால் சிறை தண்டனை பெற்றிருக்கிறார் ஒரு பயிற்சி போலீஸ் அதிகாரி.
செல்ஃபி எடுத்தால் சிறையா என யோசிக் கிறீர்களா? ஜட்ஜ் இருக்கையில் உட்கார்ந்து செல்ஃபி எடுத்தால் சிறைக்கு அனுப்பாமல் சினிமாவுக்கா கூட்டிச் செல்வார்கள்.
மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சேம்பருக்குள் சென்ற பயிற்சி போலீஸ்காரர்
ஒருவர் நீதிபதியின் இருக்கை யில் அமர்ந்து விதவிதமாக செல்ஃபி எடுத்திருக் கிறார்.
ராம் அவதார் ராவத், வயது 28. உமாரியா போலீஸ் அகாடமியில் பயிற்சி போலீஸாக இருக்கிறார்.
இவர் மது போதையில் நீதிபதியின் அறைக்குள் நுழைந்து நீதிபதி இருக்கையில் அமர்ந்து செல்ஃபி எடுத்திருக் கிறார்.
அந்த வேளையில் குறைந்தளவு ஊழியர்களே இருந்ததால் யாரும் உடனே ராம் அவதாரை கவனிக்க வில்லை.
அதனால் ஹாயாக அங்கேயே செட்டில் ஆன ராம் அவதார் செல்ஃபி எடுத்துத் தள்ளி யிருக்கிறார்.
சில மணி நேரம் கழித்து நீதிபதியின் அறைக்கு வந்து உதவியாளர் சக்தி சிங், நீதிபதி இருக்கை யில் வேறு ஒருவர் அமர்ந்திருப் பதைக் கண்டு அதிர்ந்து போயிருக் கிறார்.
அந்த நபர் குடிபோதையில் இருப்பதைத் தெரிந்து கொண்ட சக்தி சிங் உடனே போலீஸாரு க்கு தகவல் கொடுக்க
போலீஸ் ராம் அவதார் ரவாத்தை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.
செல்ஃபி போதையும் மது போதையும் சேர்ந்து ஒரு பயிற்சி போலீஸை சிறைக்கு அனுப்பி யிருக்கிற சம்பவம் மற்றவர் களுக்கு ஒரு பாடம்.
Thanks for Your Comments