புதுடெல்லி பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று காலை சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக
அவரது கணவரும் காங்கிரஸ் தலைவருமான சசிதரூருக்கு முன்ஜாமீன் வழங்கப் படுவது ஒத்தி வைக்கப் படுவதாக கூறியுள்ளது.
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இறந்து கிடந்தார்.
இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக கடந்த மே மாதம் டெல்லி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதி மன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் சசிதரூருக்கு பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கப் படுவதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு எதிர்ப்பு தெரிவித்தது.
அதனால் முன்ஜாமீன் வழங்கப் படுவது குறித்து முடிவு எடுப்பது ஒத்தி வைக்கப் படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இது குறித்து வழக்கறிஞர் விகாஸ் பவா செய்தி யாளர்களிடம் தெரிவிக்கையில், நாங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறோம்.
இது நாளை வழக்கு விசாரணைப் பட்டியலில் இருந்தது. நாங்கள் அதை நீதி மன்றத்தில் வாதிட்டு விட்டோம் மற்றும் முடிவு என்ன வருகிறது என்று பார்ப்போம்.
இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒரு மாதத்திற்கு முன்பு தாக்கல் செய்யப் பட்டுள்ள அவர்கள்
அளித்துள்ள குற்றப் பத்திரிகைக்கு முரணாக உள்ளது. எப்படி யிருந்தாலும் ஒரு நிலைப் பாட்டை எடுத்திருக் கிறார்கள். அதைக் கடந்து நீதிமன்றம் உத்தரவை வழங்கும் என்றார்.
ஜூன் 5 ம் தேதி, இவ்வழக்கு தொடர்பாக சசிதரூருக்கு டெல்லி நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்பி யுள்ளது.
சசிதரூருக்கு எதிராக தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் வன்கொடுமை புரிந்ததாக குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு தொடர்பாக ஜூலை 7க்கு முன்னதாக நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப் பட்டது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச் சாட்டுக்கு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. சசிதரூர் இப்பொழுதும் எம்பியாக இருக்கிறார்.
அதனால் அரசியல் வாதிகளுக்கென்று தனியாக செயல்படும் நீதி மன்றத்திற்கு கூடுதல் மெட்ரோ பாலிடன் தலைமை நீதிபதி சமர் விஷாலுக்கு இவ்வழக்கு அனுப்பப் படுகிறது நீதிமன்றம் தெரிவித்தது.
அதன் அடிப்படையில் டெல்லி நீதிமன்றத்தில் மே 24 அன்று நடைபெற்ற விசாரணைக்காக இவ்வழக்கு கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷாலுக்கு மாற்றப் பட்டது.
இவ்வழக்கு மே 28ல் எடுத்துக் கொள்ளப் பட்டது.
மே 14 அன்று, தற்கொலைக்குத் தூண்டிய வகையிலும், மற்றும் பெண் கொடூரமான முறையில் உயிரிழந்ததற்கு காரணமான கணவர் அல்லது கணவரின் உறவினர் என்ற
வகையிலும் இந்திய குற்ற தண்டனைச் சட்டத்தின்படி உரிய பிரிவுகளின் கீழ் சசிதரூர் ஒரு குற்றவாளி எனக் கூறி டெல்லி போலீஸ் ஒரு குற்றப் பத்திரிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.
ஜாமீன் வழங்கப் படுவது ஒத்தி வைக்கப் பட்டுள்ள நிலையில் சசிதரூர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப் படுகிறது.
Thanks for Your Comments