பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட்... வீடு கட்டும் திட்டம் !

0
கோவையில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பிக் காத நிலையில், பெண் ஒருவரது வங்கிக் கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட் செய்யப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட்... வீடு கட்டும் திட்டம் !
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு செல்வன். 

கோவை சிவானந்தா காலனி பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி பிருந்தா (25). 

இவர் சாமிநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் 2014-ம் ஆண்டு சேமிப்புக் கணக்குத் தொடங்கி யுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி பிருந்தாவின் செல்போனு க்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. 

அதில், மத்திய அரசின் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.45 ஆயிரம் பணம் டெபாசிட் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதை யடுத்து, வங்கிக்குச் சென்ற பிருந்தா, வங்கிக் கணக்கை சரி பார்த்தார். அப்போது, அவரது கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட் செய்யப் பட்டிருந்தது தெரிய வந்தது. 

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்த போது, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டமான, 

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டு வதற்காக ரூ.45 ஆயிரம் பணம் டெபாசிட் செய்யப் படுகிறது எனத் தெரிவித் துள்ளனர்.
இது குறித்து பிருந்தாவும், அவரது கணவர் அன்பு செல்வன் ஆகியோர் கூறியதாவது: “நாங்கள் இது வரை எந்த திட்டத்திலும் விண்ணப்பிக்க வில்லை. 

அதனால், வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப் பட்டுள்ளது அதிர்ச்சி யளிக்கிறது. ஒரு வேளை வேறு பயனாளிக்கு அனுப்ப வேண்டிய தொகையை, எனக்கு அனுப்பி யிருக்கலாம்.

அப்படி நடந்திருந் தால், குறிப்பிட்ட பயனாளிக்கு அந்தத் தொகையைத் தர தயாராக இருக்கிறோம். 

அரசின் பணம் எங்களுக்கு எதற்கு? அதே சமயம், இந்தப் பணத்துக்கு உரிய பயனாளி, வங்கிக் கணக்கில் பணமில்லாமல் ஏமாற்றத்துக் குள்ளாகி யிருப்பார். 

எனவே, வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புவது போன்ற முக்கியமான பணிகளில் அதிகாரிகள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும்.
ஏனெனில், இதுபோன்ற மத்திய அரசின் மானியத் தொகை ஏழை மக்களுக்கு உரியது. அதை கவனமுடன் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. 

இனியும் இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings