சிறிய கருப்பு டிராங்கோ பறவை ஒன்று 5 அடி உள்ள விங்ஸ்பன் கழுகின் தலையின் பின்புறமாக அமர்ந்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.
இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞரான லியு சியா-பின் புகைபடமாக எடுத்து உள்ளார்.
ஆசியாவில் தைவான், தைப்பியில் ஒரு கிளையில் அமர்ந்த கழுகு, ஒன்று பாம்பை சாப்பிட முயற்சித்தது. அதை புகைப்படம் எடுத்து உள்ளார்.
அப்போது சிறிய கருப்பு டிராங்கோ பறவை ஒன்று கழுகின் கழுத்து பகுதியில் வந்து அமர்ந்து அதனை தாக்கி உள்ளது.
அந்த பறவையுடன் கழுகு பறந்து உள்ளது. இதனை புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்து உள்ளார்.
சிறிய பிறவையாக இருந்தாலும் அது தனது எதிர்ப்பை காட்டி உள்ளது.
நானும் இந்த காட்சியை எதிர் பார்க்க வில்லை என புகைப்பட கலைஞர் கூறி உள்ளார்.
இந்த கருப்பு டிராங்கோ ஒரு சிறிய ஆசிய பறவை, பொதுவாக இந்தியா, ஈரான் மற்றும் இலங்கை நாடுகளில் காணப்படும்.
Thanks for Your Comments