தங்கத்தைத் திருடிச் சென்ற திருடன் இரண்டு நாட்களில் கொண்டு வந்து அதே இடத்தில் வைத்து விட்டு
மன்னிப்பு கடிதத்தையும் உடன் எழுதி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவில் தகழி பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு வீட்டில் இருந்தவர்கள் செவ்வாய்க் கிழமை உறவினர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து திருடன் ஒருவன் உள்ளே வந்திருக்கிறான்.
அங்கு அலமாரியில் வைக்கப் பட்டிருந்த மதிப்பு வாய்ந்த தங்க மோதிரம் ஒன்று, காதணி
மற்றும் ஒரு லாக்கெட் ஆகிய வற்றை எடுத்துக் கொண்டு அன்றைக்கு சென்று விட்டான்.
வீட்டுக்குச் சொந்தக் காரர்கள் திரும்பி வந்த போது வீட்டில் நகைகள் திருடு போயிருப்பதைக் கண்டனர். உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் நகைகளைத் திருடிச் சென்ற திருடன் என்ன நினைத்தானோ தெரிய வில்லை, தான் திருடிச் சென்றது தவறு என்பதை உண்ர்ந்து கொண்டான் போலிருக்கிறது.
அதனால் திருடிச் சென்ற நகைகளை திரும்பவும் எடுத்த இடத்திலேயே யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விட்டான்.
அது மட்டுமின்றி கைப்பட ஒரு மன்னிப்பு கடிதத்தையும் உடன் எழுதி வைத்து விட்டுச் சென்றது தான் இதில் உள்ள சுவாரஸ்யம்.
அக்கடிதத்தில் அவன் எழுதிய விவரம்:
''தயவு செய்து என்னை கைது செய்ய வேண்டாம். என்னை மன்னிக்கவும் இதற்காக நான் வருந்துகிறேன்.
என்னுடைய மோசமான நிலைமை காரணமாகவே நான் இந்தத் தவற்றை செய்ய நேர்ந்தது.''
நகைகளையும் மன்னிப்பு கடிதத்தையும் வைத்து விட்டு சென்றதால் இப்புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட வில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
Thanks for Your Comments