கேரள மாநிலம் அட்டப் பாடியில் உள்ள சம்பர்கோடு, அப்பர் சம்பர்கோடு மற்றும் போடி சல்லா பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பாசக் கதை தான் இது.
ஓராண்டாக இந்த மக்கள் போராடி வருகின்றனர். வழக்கமன வாழ்வாதாரப் போராட்டமோ என நினைக்க வேண்டாம் இது பாசப் போராட்டம்.
தங்கள் பகுதியில் விவசாயத்தை சேதப்படுத்தி 9 பேரைக் கொன்ற பீலாண்டி என்ற காட்டு யானையை
மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் நடை பெறுகிறது.
இத்தனை சேதங்களை சந்தித்த பிறகும் பீலாண்டி மீது இந்த மக்களுக்கு அப்படி யென்ன காதல் என்கிறீர்களா? கதையைப் படியுங்கள் உங்களுக்கே புரியும்.
பீலாண்டியை எப்படியாவது மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டுவிட வேண்டும் என்பதற்காக அட்டப்பாடி பழங்குடிகள்
இது வரை பலமுறை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி விட்டனர்.
கடந்த ஆண்டுதான் பீலாண்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த 9 பேரைக் கொன்றதுடன் வயல் வெளிகளை நாசப் படுத்தியது.
ஆனாலும் அவர்கள் பீலாண்டியை வெறுக்க வில்லை. மலை கிராமத்தின் மூத்தவர் ரங்கன்,
"பீலாண்டியை எர்ணாகுளம் மாவட்டம் கொட நாட்டுக்கு கொண்டு சென்று ஓராண்டாகி விட்டது.
கும்கியைப் பயன்படுத்தி பீலாண்டியை பிடித்துச் சென்ற போது நாங்கள் அனைவரும் வருந்தினோம்.
பீலாண்டியால் நாங்கள் நிறைய இழந்திருந்தால் மீண்டும் பீலாண்டி எங்கள் பகுதிக்கு வரவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
எங்களைப் பொருத்தவரை யானைகள் தெய்வீகம் பொருந்திய படைப்புகள். அதுவு மில்லாமல் பீலாண்டியின் பெயரை சந்திரசேகரன் என மாற்றி யுள்ளனர்.
இது நிலப்பிரபுத்துவ மனநிலை" என்றார். மற்றொரு பழங்குடிவாசி யும் சமூக ஆர்வலரு மான கே.ஏ.ராமு,
"இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி களுக்கு நடப்பதே எங்களுக்கும் நடக்கிறது.
எங்கள் பெயரைத் தேர்வு செய்ய எங்களுக்கு உரிமை இல்லையா? ஒவ்வொரு பழங்குடிப் பெயரும் இந்த உலகுக்கு நாங்கள் யார் என்பதைப் பிரகடனப் படுத்துகிறது.
பீலாண்டிக்கு நாங்கள் பெயர் சூட்டியதின் பின்னணியில் ஆழமான உணர்வு இருக்கிறது. கடந்த ஆண்டு
எங்கள் பழங்குடியினத் தலைவர் பீலாண்டி தான் இந்த யானையால் முதலில் கொல்லப் பட்டார்.
அதன் காரணமாகவே நாங்கள் அந்த யானைக்கு பீலாண்டி எனப் பெயர் சூட்டினோம்.
எங்கள் பழங்குடியினத் தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பெயரை நாங்கள் சூட்டியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
பழங்குடியினப் பாடல்கள் இசையமைப்பாளர் எஸ்.பழனிசாமி, "அட்டப்பாடி பகுதி பழங்குடிகள் யானைகள் நிலத்தை சேதப்படுத்து வதைப் புனித மாகவே கருதுகின்றனர்.
யானைகளும் வனவிலங்குகள் எங்கள் வாழ்வோடு இணைந்தவை. நாங்கள் இயற்கையோடு இசைந்து வாழ்கின்றோம்" என்றார்.
மறக்க முடியாத நவம்பர் 7
கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பீலாண்டியின் புகழ் ஊரெங்கும் பரவியது.
அட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் 54 பேர் சிறுவர்கள் 11 பேர் என ஒரு பெரிய குழுவாக
கொடநாடு யானைகள் முகாமுக்கு சென்று பீலாண்டியின் முன் மண்டியிட்டு வணங்கினர்.
பீலாண்டியை பகவான் என்றும் சுவாமி என்று போற்றினர். பீலாண்டி மீதான பாசத்தால் இன்றளவும் போராடி வருகிறார்கள்.
Thanks for Your Comments